Dinosaur: வெளியானது மர்மம்! டைனோசரைக் கொன்ற சிறுகோள் பூமியில் எங்கு தாக்கியது தெரியுமா?

பூமியைத் தாக்கிய இந்த சிறுகோள் மோதல் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக தெரிகிறது. இந்த பேரழிவின் காரணமாக டைனோசர்களின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததாக்க கூறப்படுகிறது.
டைனோசர் எலும்பு
டைனோசர் எலும்புTwitter
Published on

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பல வகைப்பட்ட டைனோசர்கள் உலகை ஆண்டதோடு பூமியில் எங்கும் சுதந்திரமாக சுற்றித் திரிந்தன.

சில நேரங்களில், டைனோசர்களின் அழிவுக்கு ஒரு பெரிய சிறுகோள் தாக்கியது காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால் அது எங்கு தாக்கியது என்று யாருக்காவது தெரியுமா?

இதுநாள் வரை மர்மமாக இருந்த இந்த விசயத்திற்கு விஞ்ஞானிகள் முடிவு கட்டியிருக்கிறார்கள். பூமியில் சிறுகோள் தாக்கிய சரியான இடத்தை அவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

பூமியைத் தாக்கிய இந்த சிறுகோள் மோதல் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக தெரிகிறது. இந்த பேரழிவின் காரணமாக டைனோசர்களின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததாக்க கூறப்படுகிறது.

சரி, அந்த சிறுகோள் பூமியில் எங்கு தாக்கியது தெரியுமா? ஊடக அறிக்கைகளின்படி, தென்னமெரிக்காவின் யுகடன் தீபகற்பத்திற்கு அருகிலுள்ள மெக்சிகோவின் சிக்சுலுப் தான் அந்த இடம்.

டைனோசர்
டைனோசர்Twitterர்

டைனோசரைக் கொல்லும் அளவுக்கு பூமியைத் தாக்கிய அந்த சிறுகோள் 10.6 முதல் 80.9 கிமீ விட்டம் கொண்டதாகத் தெரிகிறது.

சிறுகோளின் தாக்கியதால் அந்த இடத்தில் கிட்டத்தட்ட 140 கிலோமீட்டர் அகலத்தில் ஒரு பள்ளம் உருவாக்கப்பட்டது. இந்த சிறுகோள் தாக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உலகெங்கும் உள்ள பெருங்கடல்கள் அனைத்திலும் பல மீட்டர் உயரம் கொண்ட பெரிய அலைகளை ஏற்பட்டிருக்கும். அந்த நேரத்தில் பூமியிலிருந்த அனைத்து உயிரினங்களையும் அது அழித்திருக்கலாம்.

மேலும் இந்த சிறுகோள் தாக்குதல் பெரிய எரிமலைகள் லாவாக்களை வெளியேற்றியதோடு உலகெங்கும் பெரும் பூகம்பங்களையும் ஏற்படுத்தியிருக்கும்.

டைனோசர் எலும்பு
Sex Education, Narcos, Dark - Netflixல் இவற்றை தவர விடாதீர்கள் !

இந்த அபோகாலிப்டிக் பேரழிவு நிலைமைகள் டைனோசர்களின் அழிவுக்கு வழிவகுத்திருக்கும் என்று விஞ்ஞானிகளை மேற்கோள் காட்டி பிரான்ஸ் 5 ஊடகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

தோராயமாக 80 கி.மீ விட்டம் கொண்ட ஒரு சிறு கோளே பூமியில் உயிரினங்களை அழிக்க போதுமானது என்றால் அதை விட அதிக பேரழிவுகளை உருவாக்கும் அணு ஆயுதங்களை வல்லரசு நாடுகள் இன்றும் வைத்திருக்கின்றன. ஆகவே டைனோசர் அழிந்தது போல அழிவின் விளிம்பில் மனிதக் குலம் இன்றும் இருந்து வருகிறது.

டைனோசர் எலும்பு
செவ்வாய்க் கிரகத்தில் ஏலியன்கள் கால் தடமா? - அதிர்ச்சியூட்டும் படத்தை வெளியிட்ட நாசா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com