Alien : மனிதக்குலத்தை வேற்றுகிரகவாசிகள் ஏன் பார்வையிடவில்லை?

விண்மீன்களுக்கு இடையேயான பயணத்தால் முன்வைக்கப்படும் பல நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இருக்கலாம். வேற்றுகிரகவாசிகள் உண்மையில் ரகசியமாக வருகை தரலாம்; அல்லது வேற்றுகிரகவாசிகள் மனிதனுக்கு வெகு முன்னதாகவே பூமியை வந்தடைந்திருக்கலாம், என்றும் கூறுகின்றனர்.
Alien
AlienTwitter
Published on

ஏன் மனிதக்குலத்தை வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்கள்) பார்வையிடவில்லை? இந்த கேள்வி பல தசாப்தங்களாக விஞ்ஞானிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு கேள்வியாகும். ஆனால் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் சாத்தியமான மற்றும் குழப்பமான விளக்கத்துடன் வந்துள்ளனர்.

அவர்கள் “எந்த ஒரு நாகரிகமும் உச்சத்தை அடைந்த பிறகு, கட்டாயமாக வீழ்ச்சியைச் சந்திக்கும் அல்லது ஒரு கட்டத்திற்கு மேல் நகராமல் போய்விடலாம்” என்கிறார்கள்.

"விண்வெளி பயண நாகரிகங்களின் தாக்கம், புதிய கருதுகோள்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மேம்பாட்டை அடைகிற போது, அவை கடைசியாக ஒரு நெருக்கடி நிலையை அடைகின்றன. அந்த நெருக்கடி நிலைக்குப் பிறகு புதுமைக்கான ஆற்றலானது தொய்வையடைகிறது. அடுத்து அது மெல்ல மெல்ல சரிவை சந்திக்கும். அந்த சரிவைத் தடுத்து சமநிலையைப் பேணுவதற்கு "வளைந்து கொடுக்காத வளர்ச்சி" யுக்தியை நிராகரிப்பதே ஒரே மாற்று வழி. ஆனால் ஒரு நாகரீக வளர்ச்சியின் விளைவு என்பது நட்சத்திரங்களைத் தாண்டி விரிவடைந்து காணப்படுகிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Alien
AlienTwitter

”ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ்” என்கிற இதழில் மே 4 அன்று என்ரிகோ ஃபெர்மி என்கிற நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி முன்வைத்திருக்கும் வாதத்தில், ”பிரபஞ்சம் மேம்பட்ட வேற்றுக்கிரக வாழ்க்கையுடன் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் இரண்டு விஷயங்களாக இந்த பிரபஞ்சத்தின் வயது மற்றும் அதன் மிகப்பெரிய வெளி ஆகியவற்றைக் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது. மேலும் அவர், வேற்றுக்கிரக வாசிகள் எங்குப் பார்த்தாலும் இருப்பதற்கான ஆதாரம் இல்லை. "அப்படியானால் எல்லோரும் எங்கே?" என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.

"கார்னகி இன்ஸ்டிடியூஷன் ஃபார் சயின்ஸ்" நிறுவனத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் மைக்கேல் வோங் மற்றும் கலிபோர்னியாவின் ”ஸ்டூவர்ட் பார்ட்லெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி”, ஆய்வில் நாகரீக சரிவின் விளைவாக இருந்தாலும், ஹோமியோஸ்ட்டிக் விழிப்புநிலை அல்லது நாகரிக வீழ்ச்சியாக இருந்தாலும் அவையாவுமே பரந்த வான்வெளியில் நாகரிகங்கள் அழிந்த நிலையாகவே கருதப்படும்." என்று கூறுகின்றனர்.

வானவியலாளர்களுடன் ஏலியன்கள் ஏன் நேரடித் தொடர்பிலில்லை என்பதற்கான பிற அறிவியல் பரிந்துரைகளுடன் அவர்களின் முன்மொழிவு அமைகிறது. விண்மீன்களுக்கு இடையேயான பயணத்தால் முன்வைக்கப்படும் பல நடைமுறைச் சிக்கல்கள் இதில் அடங்கும். வேற்றுகிரகவாசிகள் உண்மையில் ரகசியமாக வருகை தரலாம்; அல்லது வேற்றுகிரகவாசிகள் மனிதனுக்கு வெகு முன்னதாகவே பூமியை வந்தடைந்திருக்கலாம், என்றும் கூறுகின்றனர்.

Alien
Aliens : "என்னை வேற்று கிரகவாசிகள் கடத்தப் பார்க்கிறார்கள்" - அஞ்சும்
UFO
UFOTwitter

எவ்வாறாயினும், விஞ்ஞானிகள் தங்கள் ஆலோசனையானது வெறுமனே ஒரு யூகம் தான் என்று வலியுறுத்துகின்றனர். இது பூமியில் உள்ள மனித பரிணாம காரணிகளின் ஒப்பீட்டிலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் இது " புதிய விவாதங்கள், சுயபரிசோதனை மற்றும் எதிர்கால கண்டுபிடிப்புகளைத் தூண்டுவதற்கு" உதவும் என்று கூறப்படுகிறது.

Alien
வேற்று கிரக வாசிகள் : ஏலியன்களை தேடும் முயற்சியில் வியக்க வைக்கும் சாதனை

”இந்த பிரபஞ்சத்தின் மொத்த அளவின்படி, ஒரு மேம்பட்ட உயிரினத்தால் அனுப்பப்பட்ட ஒரு சமிக்ஞையை மற்றொன்று பெறுவதற்கு 400,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. இது சராசரியான கால அளவை விட மிக அதிகமானது. இந்த கால இடைவெளியில் வேற்றுகிரகவாசிகள் பூமியைத் தொடர்பு கொள்ள முடிந்தால் அது ஆச்சர்யம் தான்” என்று ஏப்ரல் 4ஆம் தேதி வெளியான வான இயற்பியல் பதிப்பொன்று கூறுகிறது.

Alien
Alien : வேற்றுக்கிரக வாசிகளுடன் பேச முயலும் மனிதர்கள், 100 ஆண்டுக்கால முயற்சி | Podcast

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com