குளிர் காலத்தில் மூடுபனி வருவது ஏன்? அறிவியல் காரணம் என்ன?

மூடுபனி நமக்கு குளிர்காலம் முழுவதும் நிலைத்திருப்பதில்லை என்றாலும் வட இந்தியாவில் நிலைவேறு. அங்கு சில மாதங்கள் வரைக்கூட மூடுபனி இருக்கும். ஐரோப்பாவில் வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் கூட மூடுபனியைப் பார்க்கலாம்.
குளிர் காலத்தில் மூடுபனி வருவது ஏன்? அறிவியல் காரணம் என்ன?
குளிர் காலத்தில் மூடுபனி வருவது ஏன்? அறிவியல் காரணம் என்ன?Twitter
Published on

குளிர் காலத்தை மிகவும் தனித்துவமாக்குவது மூடுபனி தான். சில மீட்டர் தொலைவில் என்ன இருக்கிறது எனக் கூட தெரியாத அளவு மூடு பனி கண்களை மறைத்துவிடும்.

மலைப்பிரதேசங்களுக்கு செல்லும் போது இந்த பிரச்னையை அதிகம் சந்தித்திருப்போம். இப்போது தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக சில அடிகள் கூட தெரியாதவாறு மூடுபனி மறைத்திருக்கிறது.

ஒவ்வொரு பனிக்காலத்திலும் தவறாமல் அட்டன்டன்ஸ் கொடுக்கும் இந்த மூடுபனி எப்படி உருவாகிறது தெரியுமா?

மூடுபனி நமக்கு குளிர்காலம் முழுவதும் நிலைத்திருப்பதில்லை என்றாலும் வட இந்தியாவில் நிலைவேறு. அங்கு சில மாதங்கள் வரைக்கூட மூடுபனி இருக்கும். ஐரோப்பாவில் வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் கூட மூடுபனியைப் பார்க்கலாம்.

ஆறு, ஏரி மற்றும் பனியில் இருந்து ஆவியாகும் நீர் கண்ணுக்குத் தெரியாத நீராவியாகிறது. அது தூசி, புகை போன்ற நுண் துகள்களுடன் இணைகிறது. முடிவில் நம் பார்வையை மறைக்கக் கூடிய மூடுபனி உருவாகிறது.

எளிதாக சொல்ல வேண்டுமென்றால் சூடான நீராவியுடன் குளிர்ச்சியான காற்று (துகள்கள்) சந்திக்கும் போது மூடுபனி உருவாகிறது.

மூடுபனியை தரையில் இருக்கும் மேகம் என விவரிக்கின்றனர்.

குளிர் காலத்தில் மூடுபனி வருவது ஏன்? அறிவியல் காரணம் என்ன?
எட்டி : இமயமலை பனி மனிதன் இருப்பது உண்மையா? - மர்ம உயிர் பற்றி ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

குளிர்கால இரவுகளில் சுற்றுபுறத்தில் இருக்கும் நீராவி தீவிரமாக குளிர்ச்சி அடைவதனால் பனித்துளியாக தரையில் படியும். இதனால் குளிர் கால இரவில் சுற்றுப்புறம் மூடுபனி இல்லாமல் இருக்கும் போது தரையில் பனித்துளி இருக்கும்.

குளிர்ச்சியான காற்றில் அதிக தூசுகள் இல்லாதபோது பனிமூட்டம் உருவாகும். இதனை ஆங்கிலத்தில் மிஸ்ட் எனக் கூறுவர்.

மூடுபனியில் பலவகைகள் இருக்கின்றன. இவற்றை விளக்கமாக கூறினால் அறிவியல் வகுப்பில் அமர்ந்தது போல தூக்கம் வரும் என்பதால் சுருக்கமாக பார்த்துள்ளோம். நம்மை சுற்றியிருக்கும் விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம் இல்லையா?

குளிர் காலத்தில் மூடுபனி வருவது ஏன்? அறிவியல் காரணம் என்ன?
Xylazine : திடீரென ஜாம்பியாக மாறும் மக்கள்- அழுகும் தோல்; மனிதர்களை மிருகமாக மாற்றும் போதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com