தொல்லியல் ஆய்வாளர்கள் மனித வரலாற்றில் நமக்கு தெரிந்தவரை பழமையான மர வேலைப்பாட்டைக் கண்டறிந்துள்ளனர்.
மனிதர்கள் உருவான பகுதியாக கருதப்படும் ஆப்ரிக்காவில் உள்ள ஜாம்பியாவில் நம் முன்னோர்களின் எச்சமாக இந்த மர வேலைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த மரம் 5 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
பழங்கால பொருட்கள் அதிக அளவில் கிடைத்துவரும் கலம்போ பகுதியில் கிடைத்துள்ள இந்த மரம், எளிமையான வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் நவீன மனிதனைப் போல அறிவாற்றல் உள்ளவர்களாலேயே செய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த மரைவேலைப்பாடு 4,76,000 ஆண்டுகள் பழமையான இரண்டு வில்லோ மரங்கள் ஒன்றோடு இன்று இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நாம் கண்டறிந்த பழமையான மர வேலைப்பாடு வெறும் 9000 ஆண்டுகள் தான் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இஸ்ரேலில் காண்டுபிடிக்கப்பட்ட மர கலைப்பொருள் 7,80,000 ஆண்டுகள் பழமையான மரத்தால் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாம்பியா, தான்சானியா எல்லையில் இருக்கும் கலாம்போ நீர்வீழ்ச்சியில் 1950களில் பழங்கால மனிதன் பயன்படுத்திய கல்லாலான ஆயுதங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பண்டைய மரப்பொருட்களை கண்டறிவது என்பது மிக மிக அரிதான காரியம். ஏனெனில் மரப்பொருட்கள் விரைவில் மண்ணில் சிதைந்துவிடக் கூடியவைல. இந்த மரம் எரிந்து இருந்ததால் மனிதன் 5,00,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெருப்பைக் கண்டறிந்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மரம் எதற்காக பயன்பட்டிருக்கும் என்பது குறித்து ஆய்வாளர்களுக்கு தெளிவான சித்திரம் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு பகுதி மரம் நடைபாதையாக பயன்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
ஹோமோ சேபியன்ஸ் எனப்படும் தற்கால மனிதர்கள் 3,00,000 ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்துவருவதாகவே நம்மிடம் இருக்கும் சாட்சியங்கள் சொல்கின்றன.
எனவே இந்த மர வேலைப்பாடானது நம் முன்னோடி உயிரினங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள், "புத்திசாலித்தனம், கற்பனை மற்றும் திறன்களைப் பயன்படுத்தி, இதுவரைப் பார்க்காத ஒன்றை உருவாக்கியுள்ளனர்." என ஆய்வாளர்கள் வியந்து தெரிவிக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust