உலகெங்கும் உள்ள முஸ்லீம் மக்களுக்கு இஸ்லாமிய நாட்காட்டியின் படி ரமலான் என்பது புனித மாதமாகும். அதன் முதல் நாளிலிருந்து முஸ்லீம் மக்கள் நோன்பிருக்கிறார்கள்.
நோன்பிருக்கும் போது கடவுள் உணர்வுக்கு அதிக வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் விடியிற்காலையில் இருந்து, சூரிய அஸ்தமனம் வரை சாப்பிடுவது, குடிப்பது, புகைபிடித்தல் மற்றும் உடலுறுவு ஆகியவற்றை தவிர்ப்பதை முஸ்லீம்கள் பின்பற்றுகிறார்கள்.
உண்ணாவிரதம் என்பது உலகின் பல இடங்களில் பல கலாச்சாரங்களில் நிலவிய ஒன்றாகும். பண்டைய கிரேக்கர்கள் உடலைக் குணப்படுத்த உண்ணா நோன்பை பரிந்துரைத்தனர். 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்து முஸ்லீம்கள் ரமலான் நோன்பிருக்கின்றனர். இது ஒரு கட்டாய மதக் கடமையாகும். இன்று சில விஞ்ஞானிகள் மாற்றியமைக்கப்பட்ட உண்ணா நோன்பை மனநல மற்றும் உடநலத்திற்காக பரிந்துரைக்கின்றனர்.
இவை இடைப்பட்ட உண்ணாவிரதம் என்று அழைக்கப்படும். இப்படி மாற்றியமைக்கப்பட்ட பட்டினி வகைகளில் 12, 16 அல்லது 24மணிநேரம் சாப்பிடக் கூடாது. மற்றொரு வடிவம் வாரத்திற்கு இரண்டு முறை 500 முதல் 600 கலோரிகள் மட்டும் சாப்பிடுவதை பரிந்துரைக்கிறது.
2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பிராட் பைலனின் "சாப்பிடுவதை நிறுத்துங்கள் - ஈட் ஸ்டாப் ஈட்" என்ற புத்தகம், வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை 24 மணிநேரம் சாப்பிடுவதைத் தவிர்க்க பரிந்துரைத்தது. தனிநபர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை எப்போது தொடங்குவது மற்றும் முடிப்பது என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை இது வழங்குகிறது.
2012 ஆம் ஆண்டில், மைக்கேல் மோஸ்லி தனது தொலைக்காட்சி ஆவணப்படமான Eat, Fast and Live Longerஐ வெளியிட்டார். மற்றும் அவரது சிறந்த விற்பனையான புத்தகமான The Fast Diet ஐ வெளியிட்டார். இவை இரண்டும் இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் 5:2 கருத்தை அடிப்படையாகக் கொண்டவை.
"தி ஃபாஸ்ட் டயட்டில் நான் 'நேரம் கட்டுப்படுத்தப்பட்ட உணவு' என்று அழைக்கப்படும் உண்ணாவிரதத்தை பரிந்துரைக்கிறேன்," என்று மோஸ்லி கூறினார்.
"இது ரமழானில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் நோன்பு முறையைப் போலவே குறிப்பிட்ட மணிநேரங்களுக்குள் மட்டுமே சாப்பிடுவதை உள்ளடக்குகிறது. நிரூபணமான நன்மைகளில் மேம்பட்ட தூக்கம் மற்றும் சில புற்றுநோய்கள், குறிப்பாக, மார்பக புற்றுநோய்க்கான ஆபத்து குறைவதற்கான சான்றுகள் ஆகியவை அடங்கும்." என்கிறார் அவர்.
பகலில் உணவு உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது அதிக கொழுப்பு, இதய நோய் மற்றும் உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கவும், மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
எந்த உணவையும் உட்கொள்ளாமல் இருப்பதன் மூலம், செரிமான அமைப்புக்கு ஓய்வு கொடுப்பதால், நச்சுகளை அகற்றுவதில் நம் உடல் கவனம் செலுத்துகிறது.
ஊட்டச்சத்து நிபுணர் கிளெயிர் மஹே: "உண்ணாவிரதம் குடலை சுத்தப்படுத்த அனுமதிக்கிறது மற்றும் அதன் புறணியை பலப்படுத்துகிறது. இது தன்னியக்கவியல் எனப்படும் ஒரு செயல்முறையைத் தூண்டும். அங்கு செல்கள் சுய-சுத்தம் செய்து சேதமடைந்த மற்றும் ஆபத்தான துகள்களை அகற்றும்.” என்கிறார்.
உணவு, குடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மோஸ்லி விளக்கியது போல், உண்ணாவிரதம் மூளையில் BDNF (மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி) வெளியீட்டிற்கு வழிவகுக்கும்.
"இது மூளை செல்களைப் பாதுகாப்பதாகக் காட்டப்பட்டுள்ளது மற்றும் மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கும், அத்துடன் டிமென்ஷியா (முதுமையில் வரும் ஞாபகமறதி நோய்) வளரும் அபாயத்தையும் குறைக்கலாம்" என்று மோஸ்லி மேலும் கூறினார்.
உண்ணாவிரதத்தைத் தழுவிய பலர், சரியாகச் செய்தால், அது கொழுப்பைக் குறைக்கவும், மெலிந்த தசையைப் பெறவும் உதவியது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
எந்தவொரு உணவுமுறை அல்லது வாழ்க்கை முறை மாற்றத்தையும் போலவே, உண்ணாவிரதத்திற்கும் ஆபத்துகள் உள்ளன. ஏனெனில் இது அனைவருக்கும் பொருந்தாது.
சமரசம் செய்யப்பட்ட உடல்நலம் உள்ள நபர்கள் அல்லது ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவரைப் பின்பற்றுபவர்கள், சில பக்க விளைவுகளைக் கண்காணிக்க முயற்சிக்கும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.
"உண்ணாவிரதம் குறைந்த இரத்த குளுக்கோஸ் அளவுகளுக்கு (பிஜிஎல்) வழிவகுக்கும். இது செறிவு குறைந்து சோர்வை அதிகரிக்கிறது," என்று பதிவு செய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் நஸ்மின் இஸ்லாம் விளக்கினார்.
நிலையான உண்ணாவிரதத்தால் மட்டுமே நிலையான எடை இழப்பு சாத்தியம் என்றும், ரமலானின் போது ஏற்படும் எந்தவொரு எடை குறைப்பையும் ஒரு நபர் தனது தினசரி உணவு முறைகளுக்குத் திரும்பியவுடன் எளிதில் மாற்றியமைக்க முடியும் என்றும் நஸ்மீன் மேலும் கூறுகிறார்.
இருப்பினும், நன்மைகள் தீமைகளை விட அதிகமாக உள்ளன. நீண்ட காலத்திற்கு, உண்ணாவிரதம் சரியாகச் செய்தால், ஒருவரின் செரிமான அமைப்பையும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த முடியும்.
எனவே முஸ்லீம்கள் மட்டுமல்ல நல்ல உடல்நலம் கொண்டவர்கள் கூட ஏதோ ஒரு உண்ணாவகைகளைப் பின்பற்றுவது உடல்நலத்திற்கு ஆரோக்கியத்தை விளைவிக்கும். அது குறித்து நீங்கள் மருத்துவரையோ, ஊட்டச்சத்து நிபுணரையோ கலந்தாலோசித்து செயல்படுத்தலாம்.