இன்றைய ராசி பலன் 27 செப்டம்பர் 2023 : இந்த நான்கு ராசிக்கு நல்லது நடக்குமாம்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள் என்ன என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய ராசி பலன் 27 செப்டம்பர் 2023 : இந்த நான்கு ராசிக்கு நல்லது நடக்குமாம்!
இன்றைய ராசி பலன் 27 செப்டம்பர் 2023 : இந்த நான்கு ராசிக்கு நல்லது நடக்குமாம்!Twitter
Published on

உங்கள் இராசிக்கான பலன் என்ன, உங்களுக்கான சிறந்த எண் மற்றும் சிறந்த நிறம் என்ன, உங்களுக்கு எந்த நாள் அதிர்ஷ்டம், எந்த ரத்தினத்தை அணிந்தால் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷம்

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். வேலையில் நீங்கள் பாராட்டுகளை எதிர்பார்க்கலாம். இன்று நீங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்க நேரலாம். வீட்டில் நீண்ட நாளாக நிறுத்தப்பட்டிருந்த சில விஷயங்கள் இன்று தொடங்கப்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

இன்று சொத்து வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டில் அமைதி நிலவும்

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஏதேனும் பயணம் திட்டமிட்டிருந்தால் அது நன்மையாக முடியும்.

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: தங்கம்

மிதுனம்

இன்று நல்ல நாளாக அமையும்.

வேலைக்கு ஆள் சேர்த்துக்கொள்வதில் சரியான முடிவை எடுப்பீர்கள். பிரிந்து இருக்கும் குடும்ப உறுப்பினர் சிலர் வீடு திரும்ப வாய்ப்புள்ளது.

வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கான முயற்சிகளை இன்று மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி

கடகம்

வேலையில், நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சாதிக்க முடியும். இன்று உறவினரை சந்திக்க நீண்ட தூரம் செல்ல நேரிடும். உங்களுக்கு நெருக்கமானவர்களையும் அன்பானவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

சிம்மம்

தொழில் ரீதியாக ஒரு புதிய தொடக்கம் உண்டாகலாம்.

உங்கள் கனவுகளை நனவாக்க பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

அழைப்பின் பேரில் ஒரு அழகான இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இன்று சொத்து சம்பந்தமாக எந்த உடன்படிக்கையிலும் ஈடுபட வேண்டாம். இன்று சிறிய உடல் நல குறைபாடு ஏற்படலாம் அதனால் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ சிவப்பு

கன்னி

உங்களுக்கு வெளியூர், வெளிநாடு செல்வது தொடர்பான நல்ல விஷயங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்திலும், உத்தியோக பணியிடத்திலும் போட்டி நிலை அதிகரிக்கும்.

குடும்பத்திலும், பணியிடத்திலும் கவனமாகவும், அனுசரித்துச் செல்வதும் நல்லது

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

நீங்கள் செய்ய நினைத்த காரியம் இன்று தொடங்கப்பட வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்து தொடர்பாக நீங்கள் கையெழுத்திடுவதில் மிகவும் கவனமாக இருக்கவும்.

நீங்கள் உங்கள் துணையிடமிருந்து முழு ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

உங்கள் திறமையை நிரூபிக்க இன்று உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள், உங்கள் தேவைகளைக் கவனிப்பார்கள். வெளிநாட்டு பயணத்திற்கான திட்டங்கள் கைக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

நீங்கள் செய்ய நினைத்த காரியம் இன்று தொடங்க வாய்ப்புள்ளது.

பூர்வீக சொத்துப் பிரச்னை குறித்து முடிவெடுப்பதற்கு முன் நல்ல யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

மகரம்

பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறி இயல்பு நிலை நிலவும்

எதிர்பாராத நட்பு உங்களுக்கு கிடைக்கலாம். மாணவர்கள் பரீட்சை அல்லது போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள்

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

யாரோ பாதியில் விட்டுச் சென்ற திட்டத்தைச் சமாளித்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் இன்ப சுற்றுலாவுக்கான திட்டங்கள் நிறைவேறும். சரியான நேரத்தில் முடிவெடுத்து சொத்துகளை காப்பாற்றிகொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

கொடுத்த கடன், இன்று திரும்பக் கிடைக்கும். எதிர்பாராத பயணத்தை மேற்கொள்ளுவீர்கள்.

உங்களுக்குச் சொந்தமான ஒரு சொத்து நல்ல வருமானத்தைத் தர ஆரம்பிக்கலாம். தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் முன்பை விட இப்போது அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

இன்றைய ராசி பலன் 27 செப்டம்பர் 2023 : இந்த நான்கு ராசிக்கு நல்லது நடக்குமாம்!
வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட விநாயகி சிலை - ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com