உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, கொரோனா தொற்று காரணமான கடந்த 2 ஆண்டுகளாக கோவில் வளாகத்தில் பக்தர்கள் கலந்துக் கொள்ளாமல் நடைபெற்றது. ஆனால் இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, சித்திரைத் திருவிழா வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவில் நாள்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் கற்பகவிருட்சம், பூதவாகனம், அன்னவாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறது.
அதிலும் ஆன்மீக தீவிர பக்தரான நித்தியானந்தா, மதுரை சித்திரை திருவிழாவை தரிசனம் செய்தார் என்றால் நம்பமுடிகிறதா.?
மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் அருகேயுள்ள நித்தியானந்தம் ஆசிரமத்தில் உள்ள அவரது சீடர்கள் நித்தியானந்தா கைலாச நாட்டில் இருந்தவாறே டிஜிட்டல் முறையில் திருவிழாவை காண வசதியை ஏற்படுத்தினர். அதாவது கைலாசாவில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவை நேரலையில் காணும் வசதியை அவரது சீடர்கள் ஏற்படுத்தி கொடுத்தனர்.அதுமட்டுமில்லாமல் சித்திரை திருவிழாவை காண சென்ற பக்தர்களுக்கு அறுசுவையில் பிரசாதங்களை வழங்கவும் அவரது சீடர்களுக்கு நித்தியானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சித்திரை திருவிழாவை காண சென்ற பக்தர்களுக்கு அறுசுவையில் பிரசாதங்களை வழங்கவும் அவரது சீடர்களுக்கு நித்தியானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.