முட்டைக்குள் முட்டை, அதுவும் டைனோசர் முட்டை - ஆச்சரியத்தில் அறிவியலாளர்கள்

இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில், தார் மாவட்டத்தில் ஓர் அரிதான டைனோசர் முட்டையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Dinosaur Egg
Dinosaur EggNews Sense
Published on

டைனோசர்கள் மீது மனிதர்களுக்கு உள்ள ஆர்வத்தை சொல்லிமாளாது. டைனோசர்களை வைத்து படம் எடுத்து கோடிக் கணக்கில் சம்பாதித்தது தொடங்கி, டைனோசர்களின் எச்சங்கள், புதைபடிமங்கள், அகழ்வாராய்ச்சிகள் என டைனோசர்களை நோக்கி மனிதர்கள் மேற்கொள்ளும் தேடல்களைப் பட்டியலிட்டால் அது கிலோமீட்டர் கணக்கில் நீண்டு கொண்டே போகும்.

இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில், தார் மாவட்டத்தில் ஓர் அரிதான டைனோசர் முட்டையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த முட்டைக்குள் மற்றொரு முட்டை இருந்ததுதான் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஷயம்.

இதை டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கண்டுபிடித்தனர். இப்படி முட்டைக்குள் முட்டை இருப்பது போல புதைபடிம வரலாற்றிலேயே கிட்டத்தட்ட எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை என டெல்லி பல்கலைக்கழகம் சார்பாக வெளியான அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை எந்த ஒரு ஊர்வன விலங்கினங்களிலும் முட்டைக்குள் முட்டை கண்டுபிடிக்கப்பட்டதில்லை என சில வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Titanosaurid
TitanosauridPixabay

இந்த ஆய்வு குறித்துப் பல விஷயங்கள் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் என்கிற அறிவியல் இதழில் பிரசுரமாகி உள்ளது.

டைனோசர்களின் இனப்பெருக்க உயிரியல் ஆமைகள் மற்றும் பல்லிகளைப் போன்றதா அல்லது முதலைகள் மற்றும் பறவைகளைப் போன்றதா என பல முக்கிய விவரங்களை இந்த முட்டைகள் வெளிக்கொணரும் என இந்த ஆய்வைப் பிரசுரிக்க அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர் குண்டுபள்ளி வி ஆர் பிரசாத் கூறியுள்ளார்.

Dinosaur Egg
டைனோசர் : இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

அந்த அரிதான முட்டை, Titanosaurid ரக டைனோசர்களின் முட்டை. மத்திய இந்தியாவில் லமெடா படிமான பாறை அமைப்புகள் (மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காணப்படுகின்றன) அதிகம் இருக்கின்றன. இந்த இடங்களில் எல்லாம் அதிக அளவில் டைனோசர்களின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் டைனோசர்களின் எலும்புக் கூடுகள் முதல் முட்டைகள் வரை அடக்கம்.

மத்தியப் பிரதேசத்தின், தார் மாவட்டத்தில் பட்ல்யா (Padlya) கிராமத்தில் ஏகப்பட்ட Titanosaurid ரக டைனோசர்களின் கூடுகள் இருப்பதையும் ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

அப்பகுதியில்தான் ஒரு டைனோசர் கூட்டில், 10 முட்டைகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அதில் மேற்கூறிய முட்டைக்குள் முட்டையும் அடக்கம்.

Dinosaur Egg
தெர்மல் கேமராவில் பிடிப்பட்ட பிரமாண்டமான 'மனித குரங்கு' - வெளிச்சத்துக்கு வரும் மர்மம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com