திருவோணம்

திருவோணம்

Facebook

திருப்பங்கள் தரும் திருவோணம் : குணநலன் முதல் விரதமுறை வரை!

இன்று திருவோண நாளும் சந்திர தரிசனமும் இணைந்த நாள். மனதுகாரகனாகிய சந்திரனின் அருளும் மாலனின் அருளும் பெற திருவோண விரதம் இருந்து இரட்டை வரம் பெற்றிடலாம்.
Published on
<div class="paragraphs"><p>திருவோணம்</p></div>
மயூரசேவை – பகை அகற்றும் பாம்பன் சுவாமிகள்!

திருப்பங்கள் தரும் திருவோணம்

வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழ, வழிபாடுகள் மிக அவசியம். வரும் இடர்கள், கவலைகள் அனைத்துமே கர்ம வினைகள் தான். ஆனால் அவற்றை கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் கர்ம வினைகளை குறைத்து, வளமான வாழ்வளிப்பது வழிபாடுகள் என்றால் அது மிகையாகாது. அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவதும், நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் விரதங்களும் கைமேல் பலனளிப்பவை.

27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் “திரு” என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p>21 நட்சத்திரங்கள்&nbsp;</p></div>

21 நட்சத்திரங்கள் 

Facebook

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம். திருமால் அவதரித்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நீதி நெறி தவறாதவர்; சீரிய வழியில் பொருள் தேடுபவர்; நியாயத்தை உரைக்கவல்ல நீதிபதி; செல்வந்தர் என்று கூறுகிறது. கடின உழைப்பால் முன்னேறி வெற்றிவாகை சூடுவார்கள். சில நேரங்களில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார்கள். பசியைப் பொறுத்துக்கொள்ளாத இவர்கள் பாலால் ஆன இனிப்புகளை விரும்பி அதிகம் உண்பார்கள். அழகான உடலும், புன்னகை பூத்த முகமும் உடையவர். புலவராகவும் பண்டிதராகவும் சிறந்து விளங்குவார்கள்

விரதமுறை

திருவோண விரதமிருப்பவர்கள் முந்தய நாள் இரவு உபவாசமிருத்தல் நலம். திருவோண நட்சத்திரம் ஆரம்பித்த நேரம் முதலே பெருமாளைப்பற்றிய மந்திரங்கள், விஷ்ணு சகஸ்ரநாமம் முதலியன பாராயணம் செய்தல் நன்று. விரத நாளன்று குளித்து அருகிலுள்ள ஆலயம் சென்று ஒரு கைப்பிடியேனும் பிறர்கு உணவளித்தல் நலம். அல்லது வீட்டிலேயே பாராயணங்கள் செய்தும், மலர்களால் அர்ச்சித்தும், மனதார வேண்டிக்கொள்ளலாம். வெளியே சென்று அன்னதானமிட இயலாதவர்கள் அக்கம் பக்கத்தினருக்காவது பிரசாதம் செய்து அளிக்கலாம். துளசி தீர்த்தம் அனைவரும் பருகுவது சாலச்சிறந்தது. மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யலாம். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

இன்றைய சிறப்பு நாள்

திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ்ந்தது இந்த திருவோண நட்சத்திரத்தில் தான். ஒவ்வொரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பது நம்பிக்கை. அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம். இன்று திருவோண நாளும் சந்திர தரிசனமும் இணைந்த நாள். மனதுகாரகனாகிய சந்திரனின் அருளும் மாலனின் அருளும் பெற திருவோண விரதம் இருந்து இரட்டை வரம் பெற்றிடலாம்.

திருப்பங்களை தரும் திருவோண நட்சத்திர விரதம் கடைபிடித்து வாழ்வில் நலமும் வளமும் பெறுவோம்.

logo
Newssense
newssense.vikatan.com