Akash Madhwal அதிரடி பந்துவீச்சில் வெளியேறிய லக்னோ அணி - இறுதியில் CSKவை சந்திக்குமா MI?

நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இதில் வெற்றி பெறும் அணி, ஃபைனலில் சென்னையை எதிர்கொள்ளும்.
Akash Madhwal அதிரடி பந்துவீச்சில் வெளியேறிய லக்னோ அணி - இறுதியில் CSKவை சந்திக்குமா MI?
Akash Madhwal அதிரடி பந்துவீச்சில் வெளியேறிய லக்னோ அணி - இறுதியில் CSKவை சந்திக்குமா MI?Twitter
Published on

இளம் வீரர் ஆகாஷ் மத்வால் 5 விக்கெட் வீழ்த்தியதில், 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில், மும்பை அணி லக்னோ அணியை வீழ்த்துவது இதுவே முதல் முறை. நேற்று நடந்த போட்டி நாக் அவுட் மேட்ச் என்பதால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ளது

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி ஆரம்பத்தில் தடுமாறியது. சற்றே நம்பிக்கை கொடுத்த கேமரூன் க்ரீன் மற்றும் சூர்யகுமார் யாதவும் வெளியேற, 130 ரன்களுக்கு 4 விகெட்களை இழந்தது.

வழக்கம்போல திலக் வர்மா, டிம் டேவிட், இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய நேஹல் வதேரா சிறப்பாக விளையாடி, 20 ஒவர் முடிவில் லக்னோ அணிக்கு 183 ரன்களை இலக்காக வைத்தனர்.

லக்னோ அணிக்கு தொடக்க வீரர்கள் கைக்கொடுக்கவில்லை. பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வாலின் பந்துவீச்சில் திக்குமுக்காடினர் லக்னோ வீரர்கள், ச்டாயினிஸ் மட்டும் 40 ரன்கள் எடுத்தார்.

தன் சிறப்பாக பந்துவீச்சால் 3.3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். பிரேரக் மன்கட், ஆயுஷ் படோனி, பூரன், ரவி பிஷனாய், மோஷின் கான் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார் மத்வால். தீபக் ஹூடாவை ரன் அவுட் செய்வதிலும் முக்கிய பங்காற்றினார்.

16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

நாளை நடைபெறும் ஐபிஎல் 2023ன் இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இதில் வெற்றி பெறும் அணி, ஃபைனலில் சென்னையை எதிர்கொள்ளும்.

Akash Madhwal அதிரடி பந்துவீச்சில் வெளியேறிய லக்னோ அணி - இறுதியில் CSKவை சந்திக்குமா MI?
CSK: 10வது முறையாக ஃபைனலுக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்- என்ன பேசினார் கேப்டன் தோனி?

ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகன் விருதும், கேம் சேஞ்சர் ஆஃப் தி மேட் விருதும், valuable asset விருதும் வழங்கப்பட்டது. போட்டி முடிந்து பேசிய மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஆகாஷ் மத்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியுடன் பயணித்து வருவதாகவும், அவரது வளர்ச்சியை கண்கூட பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

காயம் காரணமாக ஜொஃப்ரா ஆர்ச்சர் விலகிய நிலையில், ஆகாஷ் மத்வால் அணிக்கு வலு சேர்ப்பார் என தான் நம்பியதாகவும், இதனால் அணிக்குள் அவரை வரவழைத்ததாகவும் தெரிவித்தார் ரோஹித். ஆகாஷ் மத்வால் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் பக்கத்து வீட்டுக்காரராம்.

29 வயதாகும் இவர் ஒரு பொறியாளர். 23 வயது வரை, டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடிவந்தார் என்பது குறிப்பிடதக்கது

Akash Madhwal அதிரடி பந்துவீச்சில் வெளியேறிய லக்னோ அணி - இறுதியில் CSKவை சந்திக்குமா MI?
IPL: 14 சீசன்களில் 12 முறை பிளே ஆஃப் சென்ற CSK; 5வது கோப்பையை கைப்பற்றுமா தோனி படை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com