IPL : "தோனியிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன்" - முதல் நாள் கமன்டரிக்கு பின் ரெய்னா ட்விட்

தோனியை விட ஐந்து வயது இளையவரான ரெய்னா போட்டியை விட்டு வெளியில் இருப்பதும், அவரை விட 2 வயது இளையவரான ஜடேஜா கேப்டனாக இருப்பதும், 40 வயதில் தோனி களத்தில் இருப்பதும் நமக்கு உரைப்பது ஒரு விஷயத்தை தான் Age is just a number.
Suresh Raina
Suresh RainaTwitter
Published on

நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொலகத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இது தொடர்பாக ஒரு ட்விட்டை வெளியிட்டுள்ளார் முன்னாள் சூப்பர் கிங் சுரேஷ் ரெய்னா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னாவை இந்த ஆண்டு கைவிட்டது சென்னை அணி நிர்வாகம். வேறெந்த அணியும் எடுக்காததால் ஐபிஎல்-ஐ விட்டு வெளியேறினார் சுரேஷ் ரெய்னா. கடந்த ஏளத்தின் அனைத்து முடிவுகளும் அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டதாக அணி நிர்வாகம் கூறியது. தோனியின் கேப்டன்சி விலகலு அதையே எதிரொலித்தது. மிகவும் கடினமாக இருந்தாலும் ரெய்னாவின் இழப்பைக் கடந்து விட்டனர் சிஎஸ்கே ரசிகர்கள்.

தோனியை விட ஐந்து வயது இளையவரான ரெய்னா போட்டியை விட்டு வெளியில் இருப்பதும், அவரை விட 2 வயது இளையவரான ஜடேஜா கேப்டனாக இருப்பதும், 40 வயதில் தோனி களத்தில் இருப்பதும் நமக்கு உரைப்பது ஒரு விஷயத்தை தான் Age is just a number.

கம்மிங் பேக் டூ ட்விட்டர், ஜடேஜா கேப்டனாக பதவியேற்றது குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டரில், “என் சகோதரனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கியது த்ரில்லாக இருக்கிறது. நாங்கள் இருவரும் வளர்ந்து வந்த ஒரு அணியின் தலைமையை ஏற்க, அவரை விட சிறப்பானவர் வேறு யாரும் இருப்பார்கள் என்று, நான் யாரையும் நினைக்கவில்லை” எனப் பதிவிட்டிருந்தார். தற்போது முதல் ஆட்டத்துக்குப் பின் மற்றொரு ட்விட்டில் சிஎஸ்கே அணியைக் குறிப்பிட்டுள்ளார்.

போட்டியில் இல்லை என்றாலும் தான் கிரிக்கெட்டில் தான் இருப்பேன் என்று அவர் முன்னர் சொன்னதுக்கு ஏற்றார் போல முதன் முதலாக கமன்டரி பாக்ஸில் களமிறங்கியிருக்கிறார் ரெய்னா. முதல் நாள் என் கமன்டரி எப்படியிருந்தது என ரசிகர்களிடம் நேரடியாக கேட்டிருந்த அந்த ட்விட்டில், ஹிந்தியில் இல்லாமல் ஆங்கிலத்தில் காமன்ட் செய்யுமாறு ரசிகர்கள் கேட்டிருந்தனர். மேலும் அதில் தோனியின் அட்டகாசமான அரை சதத்தை புகழ்ந்து, “தோனியின் அரைசதம் கண்களுக்கு விருந்தளித்தது, அவரிடம் இந்த சீசனில் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com