IPL 2022 : RCB-க்கு ஏப்ரல் 23-ல கண்டம்? முரட்டு ஃபார்மில் திமிறும் காவ்யா மாறன் அணி

வாழ்க்கை ஒரு வட்டம்; இதுல ஜெயிக்குறவன் தோற்பான், தோக்குறவன் ஜெயிப்பான் என்பதை உணர்த்தும் விதமாக ஏப்ரல் 23-ம் தேதி வராலற்றில் நிலைபெற்றது.
RCB
RCB Twitter
Published on

''ஆத்திரத்தில் சரித்திரத்தை உருவாக்கிட முடியாது. அதே மாதிரி சரித்திரத்தை பிளான் பண்ணி Blue Print போட்டு எழுதவும் முடியாது. அதுக்கொரு தீப்பொறி வேணும், ஆனா இப்போ காட்டுத்தீயே பத்திக்குச்சு'' - இது கேஜிஎஃப் வசனம்,

இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ ஆர்சிபிக்கு நிச்சயம் பொருந்தும்.

அது 2013-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி. அந்த காட்டுத்தீ 'கிறிஸ் கெயில்' தான். புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக அன்று அவர் ஆடிய ஆட்டம் சரித்திரமாக மாறியது. இன்று வரை அந்த ரெக்கார்டை எவராலும் முறியடிக்க முடியவில்லை. அந்த ரெக்கார்டை முறியடிக்கும் திராணி கொண்ட நபர் இன்னும் பிறந்துவிட்டாரா என்றும் தெரியவில்லை.

20 ஓவரில் 263 ரன்கள்; 30 பந்தில் சதம், தனிநபராக 175 ஓட்டங்கள் - டி20 வரலாற்றில் ஒரு தனி பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்கள் இன்று வரை இதுதான். ஒரே போட்டியில் 21 சிக்ஸர்கள் விளாசிய ஒரே அணி, தனி நபர் ஒருவர் ஒரே போட்டியில் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள்(17).

இப்படி ஏகப்பட்ட சாதனைகள். தனி ஒரு ஆளாக கெயில் பாய் மொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த தினம் அது.

ஆர்சிபி வைத்த இலக்கை விட 131 ரன்கள் குறைவாக எடுத்துத் தோற்றது புனே வாரியர்ஸ்.

நாட்கள் உருண்டோடடியது. நான்கு ஆண்டுகள் கடந்தன. அது 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி.

கொல்கத்தா அணி பெங்களூருக்கு எதிராக 131 ரன்கள் குவித்தது. சேஸிங்கில் களமிறங்கியது ஆர்சிபி. கிறிஸ் கெயில், விராட் கோலி, டி வில்லியர்ஸ் என 2013-ம் ஆண்டு விளையாடிய அதே Three Stars கூட்டணி இப்போதும் இருந்தது.

ஆனால், அந்த போட்டியில் ஆர்சிபி எடுத்த ரன்கள் வெறும் 49. அதில் ஏழு ரன்கள் எக்ஸ்டராவாக கிடைத்தவை. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி குவித்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுதான்.

வாழ்க்கை ஒரு வட்டம்; இதுல ஜெயிக்குறவன் தோற்பான், தோக்குறவன் ஜெயிப்பான் என்பதை உணர்த்தும் விதமாக ஏப்ரல் 23-ம் தேதி வராலற்றில் நிலைபெற்றது.

இதோ அந்த சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் உருண்டிவிட்டன. இப்போது 2022-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி.

இதுவரை பெங்களூரு பார்க்காத வகையில் வித்தியாசமான கேப்டன்சியை செய்துவரும் ஃபாப் டு பிளசிஸ்; உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் விராட் கோலி; அதிரடி மண்ணன் கிளென் மேக்ஸ்வெல், பேய்த்தனமாக இந்த சீசனில் பந்துகளை விரட்டி அடிக்கும் தினேஷ் கார்த்திக் இப்படி நான்கு பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களுடன் தெம்பாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொண்டது ஆர்சிபி.

RCB
IPL 2022: CSK vs MI: சிங்கங்கள் வேட்டையாடுவதை மறப்பதில்லை; கடைசி ஓவரில் கெத்துகாட்டிய தோனி

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் சேஸிங்கை தேர்ந்தெடுத்தார்.

டு பிளசிஸ், அனுஜ் ராவத் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினர். முதல் ஓவரில் ஐந்து ரன்கள் எடுத்து பெங்களூரு.

இரண்டாவது ஓவரை மார்கோ ஜென்சன் வீசினார். இரண்டாவது பந்தில் டுபிளசிஸ் போல்டானார். இதையடுத்து விராட் கோலி களமிறங்கினார்.

ஆனால், அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே மர்கிரமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் கோல்டன் டக் ஆனார் விராட் கோலி.

அந்த அதிர்ச்சியில் இருந்து ஆர்சிபி ரசிகர்கள் மீண்டு வருவதற்குள் அதே ஓவரில் அனுஜ் ராவத் விக்கெட்டையும் வீழ்த்தினார் ஜென்சன். ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகள் இழந்ததால் நிலை குலைந்தது ஆர்சிபி.

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை நடராஜன் வீச.வந்தார். அவர் மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றினார். அப்போது ஆர்சிபி ஸ்கோர் 21 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள்.

ஐபிஎல் வரலாற்றில் மிகக்குறைந்த ஸ்கோரான 49 ரன்களையாவது ஆர்சிபி கடக்குமா எனப் பதற்றம் ஏற்பட்டது.

RCB
கேஜிஎஃப் 2: ரத்தம் சிந்திய கோலார் தமிழர் துயர வரலாறு - விரிவான தகவல்கள்

ஆட்டம் முடிய 23 பந்துகள் மீதமிருக்கும் முன்னரே ஆர்சிபியின் 10 விக்கெட்டுகளை முடிந்துவிட்டது.

நடராஜன் ஓவர் வீச வந்தபோதெல்லாம் ஒரு விக்கெட்டை எடுத்துச் சென்றார். மார்கோ ஜென்சன், நடராஜன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த பெங்களூரு அணி 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மீண்டும் ஏப்ரல் 23-ம் தேதி வரலாற்றில் ஆர்சிபி இடம்பிடித்துவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.

இதெல்லாம் ஒரு டார்கெட்டா என்ற ரீதியில் எட்டாவது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் வைத்து மேட்சை வென்றது சன் ரைஸர்ஸ் ஹைதரபாத்.

ஒரு கட்டத்தில் புள்ளிப்பட்டியலில் சென்னைக்கும் மும்பைக்கும் கீழே கடைசியில் அமர்ந்திருந்த சன்ரைஸர்ஸ் அணி, அடுத்தடுத்து ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று தற்போது 10 புள்ளிகளுடன் பாயின்டஸ் டேபிளில் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

நேற்றுவரை இரண்டாமிடத்தில் இருந்த ஆர்சிபி மகா மட்டமான தோல்வியால் ரன்ரேட் சரமாரியாக சரிய நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் அணி கொல்கத்தாவை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நம்பர் 1 இடத்தை தக்கவைத்தது.

முதல் இரண்டு இடங்களில் உள்ள குஜராத் அணியும் ஹைதரபாத் அணியும் ஏப்ரல் 27-ம் தேதி மல்லுக்கடவுள்ளன. அதுவே இந்த இரு அணிகளின் அடுத்த ஆட்டமாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com