இந்தியாவில் மிக விரும்பப்படும், அத்தனை விதமான மனிதர்களையும் இணைக்கும் கருவி கிரிக்கெட் தான், அதிலும் 2008 ஆம் ஆண்டில், அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களையும், ரசிகர்களையும் இணைக்கும் வகையில் துவங்கப்பட்டது இந்தியன் பிரீமியர் லீக் தொடர்.
கடந்த 15 ஆண்டுகளாகத் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர், பல திறமையான, கண்டறியப்படாத ஆட்டகாரர்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒவ்வொரு ஆண்டும் சம்மரை எதற்காக எதிர்பார்த்தோமோ இல்லையோ, ஐபிஎல்லுகாக எதிர்பார்க்கபட்டது.
அந்த வகையில், ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பும், நம்பிக்கையும், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் சராசரி மனிதனுக்கும் அதிகமாகவே இருந்தது. ஐபிஎல் ஹைப் அதிகமாக அதனை ஒளிபரப்பும் விதங்களும் தொழில்நுட்பங்களும் முன்னேறிக்கொண்டு வந்தது. அந்த வகையில், 2008ல் ஐபிஎல் துவங்கப்பட்டதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமத்தை பிசிசிஐ சோனியிடம் தந்திருந்தது.
இந்த 15 ஆண்டுகளில் ஸ்பான்சர்கள் பல மாறியிருந்தாலும், ஒளிபரப்பும் உரிமை என்னவோ இரண்டு நிறுவனங்கள் தான் வைத்திருந்தது.
2008-2017 வரை, 10 ஆண்டுகளுக்கு சோனி நிறுவனம் கொடுத்திருந்த தொகை வெறும் 8000 கோடி ரூபாய் தான். ஆனால் ஐபிஎல் இன் அபரிமிதமான வளர்ச்சி, இன்று ஏலத்தின் தொகையை 48,000 கோடிக்கு உயர்த்தியுள்ளது.
முதல் 10 ஆண்டுகள் சோனி நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்றிருந்த நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்டார் குழுமம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை ரூ. 16,347.5 கோடிக்கு பிசிசிஐ இடமிருந்து பெற்றிருந்தது.
இதில் ஒரு போட்டிக்கு தலா 54.5 கோடி ரூபாய் கொடுத்தது ஸ்டார் குழுமம். இந்த உரிமமும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது மூன்று நாட்களாக இணையம் வழியாக பிசிசிஐ ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தை நடத்தியது. டிஸ்னி ஸ்டார் குழுமமும், வயாகாம்18 குழுமமும் தான் முன்னிலையிலிருந்தது.
மொத்தம் நான்கு பேக்கேஜ்களாக ஒளிபரப்பு உரிமம் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் டிஸ்னி ஸ்டார் குழுமம் பேக்கேஜ் ஏ வை வாங்கியுள்ளது. அதாவது இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பும் உரிமத்தை ரூ.23,575 கோடிக்கு பெற்றுள்ளது. 2023-2027 போட்டிகளை இந்தியாவில் டிஸ்னி குழுமம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்.
பேக்கேஜ் பி மற்றும் சி ஐ தேர்ந்தெடுத்துள்ள வயாகாம்18/ரிலயன்ஸ் நிறுவனங்கள் ஏலத்தை பெற்றது ரூ.23,758 கோடிக்கு.
பேக்கேஜ் பி இன் படி, போட்டிகளின் டிஜிட்டல் ஒளிபரப்பு இந்தியாவிற்க்குள் செய்யப்படும். பேக்கேஜ் சி இன் படி, ஒரு சீசனில் நடைபெறும் 18 பிரத்யேகமாக ஒதுக்கப்படாத போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை அந்நிறுவனங்கள் பெறும்.
மேலும் பேக்கேஜ் டி, அதாவது வெளிநாட்டில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பும் உரிமைகளை வயாகாம்18 நிறுவனமும் டைம்ஸ் நிறுவனமும் ரூ.1057 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளன.
ஏலம் ஒவ்வொரு போட்டிக்கும் இவ்வளவு தொகை என்ற அடிப்படையில் நடைபெற்றது. அந்த வகையில், ஒரு போட்டிக்கு ரூ.118.02 கோடி மொத்தமாக கிரிக்கெட் வாரியத்துக்கு இந்நிறுவனங்கள் கொடுக்கும்.
வெறும் 8,200 கோடி ரூபாய்க்கு துவங்கப்பட்ட ஐபிஎல் ஸ்ட்ரீமிங் ரைட்ஸின் விலை தற்போது விண்ணை எட்டியுள்ளது. இந்த ஏலத்தில் பிசிசிஐ ரூ. 48,390 கோடி பெற்றுள்ளது. அதிலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமையை விட, டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பும் உரிமைக்கான ஏலத்தொகை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சி தான் என்கிறது பிசிசிஐ. மேலும் டிஜிட்டல் ரெவல்யூஷன் கிரிக்கெட்டை பார்க்கும் விதத்தை மாற்றியுள்ளதாகவும், இது போட்டிகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் பிசிசிஐ இன் செயலாளர் ஜெய் ஷா குறிப்பிட்டார்.
2018-2022 வரை ஸ்டார் குழுமம் போட்டிகளை மொபைல் ஃபோன் மூலம் பார்க்கும் வசதிகளை ஏற்படுத்தியது, ஐபிஎல் தொடரின் வளர்ச்சியில் ஒரு திருப்பமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust