சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு இந்த முறையும் தோனி தான் கேப்டனாக இருப்பர் என அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.
2008ல் துவங்கிய இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நிலைத்து நிற்கும் அணிகளில் ஒன்று சென்னை. சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு தொடர்களில் அணி தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் மீண்டும் அணி தொடரில் விளையாட துவங்கியது.
15 சீசன்களில் மொத்தம் நான்கு முறை சிஎஸ்கே கோப்பை வென்றிருக்கிறது. ஐபிஎல் இல் மற்ற அணிகளின் கேப்டன்கள் அவ்வப்போது மாற்றப்பட்டாலும், சென்னை அணியின் கேப்டனாக முதல் சீசனிலிருந்து தோனி தான் பதவி வகித்து வந்தார்.
கடந்த வருடம் நடந்த தொடரில் தான், அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜாவிடம் அணித் தலைமை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவரது தலைமையில் அணி சரியாக விளையாடவில்லை. ஜடேஜாவின் ஆட்டத்திலும் தோய்வு தெரியவே, ரசிகர்கள் தலைமையை மீண்டும் தோனியிடம் தரவேண்டும் என சமூக வலைத்தளங்களில் பேசத் துவங்கினர்.
அதற்கு ஏற்றார்போல், தொடரின் மத்தியில், மீண்டும் சென்னை அணிக்கு கேப்டன் ஆனார் தோனி. இது தற்காலிக மாற்றமாகவே இருக்கும், அடுத்த தொடரில் புதிய அணி தலைவர் நியமிக்கப்படலாம் என பேச்சுக்கள் வந்தன.
இந்நிலையில், சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அடுத்த சீசனிலும் சென்னை அணியை தோனி தான் வழி நடத்துவார் என தெரிவித்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
InsideSport என்ற விளையாட்டு செய்தி நிறுவனத்திடம் பேசிய காசி விஸ்வநாதன், "எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை. மாற்றங்கள் இருக்கும் எனவும் நாங்கள் கூறவில்லை" என தெரிவித்திருந்தார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust