பிசிசிஐயின் தலைமை அணி தேர்வாளர் சேட்டன் சர்மா தனது பதவியிலிருந்து விலகினார்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு தலைவர் சேட்டன் சர்மா. இவரையும் இவரது தலைமையில் செயல்பட்ட தேர்வுக்குழுவையும் கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ பதவி நீக்கம் செய்திருந்தது. பின்னர் ஜனவரி மாதத்திலேயே தேர்வுக்குழு தலைவராக மீண்டும் பணியமர்த்தப்பட்டார்
ஜீ நியூஸ் ஊடகம் இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பாக நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இரு தினங்களுக்கு முன் சேட்டன் சர்மா சர்ச்சைக்குரிய சில தகவல்களை வெளியிடும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதை அடுத்து சேட்டன் சர்மா மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சேட்டன் சர்மா.
தன் ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஜெய் ஷாவிற்கு இவர் அனுப்பியதாகவும், அதனை ஜெய் ஷா ஏற்றுகொண்டதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.
அந்த வீடியோவில் சேட்டன் சர்மா முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியை பதவி நீக்கம் செய்வதில் அவர்கள் முனைப்புடன் இருந்ததும், ரோஹித் சர்மாவுக்கும் கோலிக்கும் இடையில் வெளியில் சொல்லப்படாத பகையுணர்வு நிலவுவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் இந்திய அணி வீரர்கள் சிலர் தங்கள் உடல் தகுதியை நிரூபிக்க ஊக்க மருந்து எடுத்துக்கொள்வதாகவும் அவர் பேசியிருந்தார்.
இந்திய அணி 2013ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லாதது, ஒரே ஆண்டில் 7 கேப்டன்கள் மாற்றம் என இந்திய அணிக்குள் நிலவிய குழப்பங்களை கருத்தில் கொண்டு சேட்டன் சர்மாவை முன்னர் பிசிசிஐ பதவிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust