IPL 2023: ரிங்கு சிங் - தரையில் தொடங்கிய பயணம் விண்ணை எட்டிய கதை! யார் இவர் ?

இன்னொரு பக்கம் கிரிக்கெட்டின் மீதான காதல் அலாதியாக இருக்க, மாநில அணிகளுக்கும் விளையாடி வந்தார். மாநில ஜூனியர் அணிக்கு விளையாட கிடைத்த பணத்தையும் வீட்டிற்கே கொடுத்துவிட்டாராம்.
Rinku Singh
Rinku SinghTwitter
Published on

ஐபிஎல், கிரிக்கெட் உலகிற்கு பல திறமையான ஆட்டக்காரர்களை அடையாளம் காண செய்துள்ளது. ஒரு முறை சரியான கண்களுக்கு இவர்கள் பட்டுவிட்டால், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இவர்களுடைய வாழ்க்கை மாறியிருக்கிறது. யார்கர் நடராஜன், தீபக் சஹர், ஷர்துல் தாகூர் என பல பிரபலங்களை அடையாளப்படுத்தியது ஐபிஎல் தான்.

Rinku Singh
Rinku SinghTwitter

அந்த வகையில், இன்று கிரிக்கெட் உலகம் புகழும் நட்சத்திரமாகத் திகழ்கிறார், 24-வயது வீரர் ரிங்கு சிங். கடந்த சீசன் தொடக்கத்திலிருந்தே முழு வீச்சில் களமிறங்கிய ரிங்கு, நேற்று லக்னோஅணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அனைவரது கவனத்தையும் முழுமையாக ஈர்த்துவிட்டார். 211 ரன்கள் இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணி, மீண்டும் ஓபனர்களின் சொதப்பலால் வலுவில்லாமல் இருந்தது. பின்னர் களமிறங்கிய ஷ்ரேயஸ், நிதீஷ் ராணா அணியை இழுத்துப் பிடிக்க, 20 பந்துகளில் 61 ரன்கள் தேவையென இருந்தது கொல்கத்தாவின் வெற்றிக்கு.

களமிறங்கிய ரிங்கு சிக்ஸர், ஃபோர் என் விளாச, கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவையாக இருந்தது. ரிங்கு சிங் அவுட் ஆனதால், கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. ஆனால் ரிங்கு தான் அனைவரின் மனங்களிலும், பேச்சுகளிலும் இருந்தார். இந்த இடத்திற்கு வர அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். தன் வெற்றிப்பாதையை பகிர்ந்துகொண்ட ரிங்கு, இன்னும் ஒரு படி மேலுயர்ந்து பார்க்கும் படி செய்கிறார்.

Rinku Singh
Rinku SinghTwitter

ரிங்கு சிங் யார்?

உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த இந்த 24 வயது இளைஞன், வீடு வீடாக சென்று கேஸ் சிலிண்டர் டெலிவர் செய்யும் தொழிலாளியின் மகன். இவருடன் சேர்ந்து வீட்டில் 5 சகோதர சகோதரிகள். 16 வயதில், குடும்ப சூழ்நிலை காரணமாக கடைகளில் தரையைச் சுத்தப்படுத்தும் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம் கிரிக்கெட்டின் மீதான காதல் அலாதியாக இருக்க, மாநில அணிகளுக்கும் விளையாடி வந்தார். மாநில ஜூனியர் அணிக்கு விளையாட கிடைத்த பணத்தையும் வீட்டிற்கே கொடுத்துவிட்டாராம்.

மற்றுமொரு முறை சிறப்பாக விளையாடியதற்காகக் கிடைத்த இரு சக்கர வாகனத்தை தன் தந்தைக்கு சிலிண்டர் டெலிவர் செய்ய கொடுத்துவிட்டார்.

ஐபிஎல் வாய்ப்பு

இப்படி கிடைத்த வாய்ப்புகளில் தன் திறமையை வெளிக்காட்டி, சம்பாதித்த பணத்தை வீடிற்க்கு தந்து தன் நாட்களை கடத்தி வந்த இவரை 2017ல் பஞ்சாப் அணிக்காக குறைந்த பட்ச விலையில் வாங்கப்பட்டார். ஆனால் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சப்ஸ்டிட்யூடாக மட்டும் அவ்வப்போது விளையாடி முடிந்தவரை லைம் லைட் பெற்று வந்தார். பின் கொல்கத்தா அணி இவரை ஏலத்தில் 2018ல் 55 லட்சத்திற்கு எடுத்தது.

Rinku Singh
Rinku SinghTwitter

நம்பிக்கை கொடுத்த கொல்கத்தா

2018-19ல் நடந்த ரஞ்சி கோப்பையில், 10 போட்டிகளில் 953 ரன்கள் குவித்தார். ஆனால், அவ்வப்போது விளையாடி எப்படியேனும் அணிக்குள் நிரந்தர இடத்தை பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, 2021ல் இவருக்கு ஏற்பட்ட காயத்தினால் அந்த ஆண்டு ஐபிஎலில் இவர் விளையாடவில்லை.

அப்போதும் இவருக்கு நம்பிக்கையாக இருந்தது கொல்கத்தா அணி நிர்வாகம். இவரது மருத்துவ செலவுகளையும் ஏற்றுக்கொண்டு, இவர் குணமானதுடன், நடப்பாண்டு தொடருக்கு இவரை மீண்டும் ஏலத்தில் எடுத்தது.

"20 லட்சம் கிடைத்தால், தனக்கும், குடும்பத்திற்கும் உதவியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் 80 லட்சத்திற்கு என்னை ஏலத்தில் வாங்கியிருந்தார்கள். அதை வைத்து என் சகோதரர்களின் திருமணத்தை முடிக்க வேண்டிய உதவியை செய்யவேண்டும்" என்று கண்கலங்க வைத்தார் ரிங்கு.

Rinku Singh
Rinku SinghTwitter

உத்திர பிரதேசத்துக்காக ஆடி வந்த இவர், இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா தலைமையில் தான் வளர்ந்தார். உ.பி அணியின் கேப்டனாக இருந்த ரெய்னா, ரிங்கு சிங்கிற்கு தொடர் வாய்ப்புகளை அளித்து, மிடில் ஆர்டரில் களமிறக்கினார்.

பேட், பேடு என ரிங்குவிற்கான கிரிக்கெட் கிட்கள், பொருளாதார உதவிகளை தொடர்ந்து செய்துள்ளார் ரெய்னா.

5 வருடங்களாக தான் சிரித்துக்கொண்டிருப்பதை மட்டும் தான் இந்த உலகம் பார்த்தது, ஆனால், அந்த சிரிப்புக்கு பின்னால் இருந்த வலியை தினம் அனுபவித்தாக சொன்ன ரிங்கு, இப்போது கிடைக்கும் பேரும் புகழும் அந்த வலிகளை மறக்கடிக்க செய்கின்றன என்று நெகிழ்கிறார்.

Rinku Singh
Dhoni : "Play-off போகலைன்னா உலகம் அழிஞ்சிடாது" வெற்றி குறித்து தோனி கூறியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com