கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோTwitter

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்ஸிற்கும் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டதாக தெரிவித்ததுள்ளனர்.
Published on

கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக விளங்கி வருபவர் யுனைடெட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது நடைபெற்று வரும் ப்ரீமியர் லீல் தொடரில் கோல் அடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமையை பெற்றார். இந்த சந்தோசமான தருணத்தில் ரொனால்டோ குடும்பத்தில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்டியானா ரொனால்டோ - ஜார்ஜினா ஜோடிக்கு ஏற்கனவே கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும் ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர். சமீபத்தில் மீண்டும் ஜார்ஜினா கருதரித்திருந்தார்.

இந்த முறை இரட்டைக் குழந்தை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியடைந்தார். இந்நிலையில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக தெரிவித்ததுள்ளனர்.

இதுகுறித்து ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா இருவரும் இணைந்து வெளியிட்ட இணையதள பதிவில், "மிகவும் ஆழ்ந்த சோகத்தில் எங்களின் இரட்டை குழந்தைகளில் ஒன்றான ஆண் குழந்தை இறந்துவிட்டதை தெரிவிக்கிறோம், இந்த வலியை எந்தவொரு பெற்றோரும் உணருவார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த இணையத்தள பதிவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
சண்டிகர் : ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு ரூ.15 லட்சம் கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய நபர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

logo
Newssense
newssense.vikatan.com