GT vs DC: Table Topperகளிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்த டெல்லி - என்ன நடந்தது?

டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது. குறிப்பாக இஷாந்த் சர்மா, குஜராத் அணி வீரர் விஜய் சங்கரை அவுட் ஆக்க வீசிய knuckle ball ஐ கண்டு நேற்று கிரிக்கெட் உலகமே வாய் பிளந்தது.
GT vs DC: Table Topperகளிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்த டெல்லி - என்ன நடந்தது?
GT vs DC: Table Topperகளிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்த டெல்லி - என்ன நடந்தது?ட்விட்டர்
Published on

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி, தரவரிசையில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லியிடம் நேற்று தோற்றுள்ளது.

ஐபிஎல் 2023ன் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த டெல்லி அணி வீரர்கள் குஜராத் பந்துவீச்சில் தடுமாறினர்

ஒரளவுக்கு தாக்கு பிடித்தது அக்சர் படேல், அமன் கான் மற்றும் ரிப்பல் படேல் ஆகிய மூவர் தான். அதிகபட்சமாக அமன் கான் 51 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் 130 ரன்களை எடுத்தது டிசி. குஜராத் சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்கள் எடுத்திருந்தார்

ஐபிஎல்லில் தற்போது சிறந்த பேட்டிங் மற்றும் பௌலிங் லைன் அப்பை வைத்திருக்கும் அணி என பலராலும் போற்றப்படும் குஜராத் அணிக்கு இந்த இலக்கு மிக மிக எளிதானதே.

ஐபிஎல்லில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல தொடக்க வீரர்கள் சொதப்ப, கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டுமே ஆறுதல் ஆக இருந்தார். பூஜ்ஜியம், 6, 3 ரன்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் ஏமாற்றினர்.

டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது. குறிப்பாக இஷாந்த் சர்மா, குஜராத் அணி வீரர் விஜய் சங்கரை அவுட் ஆக்க வீசிய knuckle ball ஐ கண்டு நேற்று கிரிக்கெட் உலகமே வாய் பிளந்தது.

GT vs DC: Table Topperகளிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்த டெல்லி - என்ன நடந்தது?
RR vs CSK: 5வது முறையாக CSKவை வீழ்த்திய ராஜஸ்தான்! தோல்விக்கு பின் தோனி என்ன பேசினார்?

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான டேல் ஸ்டெயின், “நான் என் வாழ்நாளில் இதுவரை பார்த்ததிலேயே சிறந்த knuckle ball ஐ இஷாந்த் வீசியிருக்கிறார்” என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. என்றாலும், மேலிடத்தில் இருக்கும் அணிகள் தொடர்ந்து தோற்று வருவது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

200 ரன்களுக்கு மேல் குறிக்கும் இலக்கை எளிதில் டிஃபெண்ட் செய்யும் அணிகள், குறைந்த ஸ்கோர்களை எட்டிப்பிடிக்க முடியாமல் தடுமாறி வருகின்றன.

இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவிருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி லக்னோ அணியை எதிர்கொள்கிறது, அடுத்தப் போட்டியில் பஞ்சாப் அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது

GT vs DC: Table Topperகளிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்த டெல்லி - என்ன நடந்தது?
IPL 2023: விராட் கோலி டூ சஞ்சு சாம்சன் - ஐபிஎல்லில் இந்தியர்களின் அதிகபட்ச தனிபட்ட ஸ்கோர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com