Dhruv Jurel: "கிட் வாங்க நகையை விற்ற அம்மா" - இந்திய அணியில் இடம்பெற்ற இளம் வீரர் உருக்கம்
Dhruv Jurel: "கிட் வாங்க நகையை விற்ற அம்மா" - இந்திய அணியில் இடம்பெற்ற இளம் வீரர் உருக்கம்Twitter

Dhruv Jurel: "கிட் வாங்க நகையை விற்ற அம்மா" - இந்திய அணியில் இடம்பெற்ற இளம் வீரர் உருக்கம்

நான் இந்திய அணியில் தேர்வானதை பெற்றோரிடம் சொல்லும்போது, எந்த இந்திய அணி எனக் கேட்டார்கள். ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாடும் இந்திய அணி என அவர்களிடம் கூறினேன்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் துருவ் ஜுரேல். இந்திய அணியின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிர்க்கெட் போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக விளையாடவிருக்கிறார் ஜுரேல்.

அண்டர் 19 போட்டிகளிலேயே பிசிசிஐ தேர்வுகுழுவினரை ஈர்த்தவர் துருவ் ஜுரேல். அதன் பிறகான ரஞ்சி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். உத்தரபிரேசத்தின் மற்றொரு இளம் வீரர் ரிங்கு சிங்கின் நெருங்கிய நண்பர் ஜுரேல் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவரான ஜுரேல் தனது கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசும் போது, "நான் ராணுவப் பள்ளியில் படித்தபோது வீட்டிற்கு தெரியாமல் கிரிக்கெட் பயிற்சிக்கு பெயர் கொடுத்தேன். அப்பாவிற்கு தெரிந்ததும் என்னை திட்டினார். பின் அவர் ₹800 கடன் வாங்கி பேட் வாங்கிக் கொடுத்தார். அதன்பின் கிரிக்கெட் கிட் வேண்டும் எனக் கேட்டேன். ₹7,000 வரை செலவாகும் எனக் கூறியதும் விளையாடவே வேண்டாம் எனக் கூறிவிட்டார். நான் அடம்பிடித்ததால், என் அம்மா நகையை விற்று எனக்கு பணம் கொடுத்தார். ஆனால், தற்போது அனைத்திற்கும் பலன் கிடைத்துவிட்டது. நான் இந்திய அணியில் தேர்வானதை அவர்களிடம் சொல்லும்போது, எந்த இந்திய அணி எனக் கேட்டார்கள். ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாடும் இந்திய அணி என அவர்களிடம் கூறினேன்." எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆணியில் கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் என இரண்டு விக்கெட் கீப்பர்களுக்கு பிறகு மூன்றாவது விக்கெட் கீப்பராக இணைந்துள்ளார் துருவ் ஜுரேல்.

Dhruv Jurel: "கிட் வாங்க நகையை விற்ற அம்மா" - இந்திய அணியில் இடம்பெற்ற இளம் வீரர் உருக்கம்
India vs England : டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பு - யார் யாருக்கு வாய்ப்பு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com