கால்பந்து : வரலாற்றில் முதன்முதலாக கொடுக்கப்பட்ட 'White Card' - விரிவான தகவல்கள்

பெஃப்னிகா மற்றும் ஸ்போர்டிங் லிஸ்போன் அணிகள் விளையாடிய அந்த ஆட்டத்தில் இரு அணி மருத்துவ உதவியாளர்களும் ஒருவருக்கு உதவிய போது நடுவர் தனது பையில் இருந்து வெள்ளை அட்டையை வெளியில் எடுத்துக் காட்டினார்.
கால்பந்து : வரலாற்றில் முதன்முதலாக கொடுக்கப்பட்ட 'White Card' - விரிவான தகவல்கள்
கால்பந்து : வரலாற்றில் முதன்முதலாக கொடுக்கப்பட்ட 'White Card' - விரிவான தகவல்கள்Twitter
Published on

கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக நடுவரால் வெள்ளை அட்டைக் காட்டப்பட்டுள்ளது.

இந்த அட்டைக்கான அர்த்தம் என்ன? எதற்காக யாருக்கு கொடுக்கப்பட்டது? இதன் விளைவு என்ன? என்பவற்றை பார்க்கலாம்.

போர்ச்சுகலில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பை கால் இறுதிப் போட்டியில் தான் இந்த அட்டைக் கொடுக்கப்பட்டது.

பெஃப்னிகா மற்றும் ஸ்போர்டிங் லிஸ்போன் அணிகள் விளையாடிய அந்த ஆட்டத்தில் இரு அணி மருத்துவ உதவியாளர்களும் ஒருவருக்கு உதவிய போது நடுவர் தனது பையில் இருந்து வெள்ளை அட்டையை வெளியில் எடுத்துக் காட்டினார்.

மஞ்சள் மற்றும் சிகப்பு கார்டுகளைப் பயன்படுத்துவதை மட்டுமே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். இது வீரர்களின் மோசமான நடத்தை மற்றும் விதிமீறல்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த கார்டுகள் 1970 உலகக் கோப்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது மூன்றாவது நிறமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வீரர்களின் சரியான விளையாட்டு குணத்தை (Sportsmanship) பாராட்டவும் நேர்மை மற்றும் மதிப்புமிக்க நடத்தைகளை ஊக்குவிக்கவும் இந்த வெள்ளை அட்டை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை கார்டு கொடுப்பதன் மூலம் மனிதாபிமான நடவடிக்கைகளுடன் செயல்படும் வீரர்கள் உடனடியாக அங்கீகரிக்கப்படுவர்.

கால்பந்து : வரலாற்றில் முதன்முதலாக கொடுக்கப்பட்ட 'White Card' - விரிவான தகவல்கள்
Foot Ball ஸ்டேடியத்தில் ஏற்பட்ட நெரிசலால் 129 பேர் பலி- நடந்தது என்ன?

வரலாற்றில் இதுவரை ஒரு முறைக் கூட கொடுக்கப்படாத இந்த வெள்ளை அட்டை, இரு அணிகளைச் சேர்ந்த மருத்துவ குழுவினரும் உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு உதவியதற்காக கொடுக்கப்பட்டது.

வெள்ளை அட்டை கொடுக்கப்பட்டதும் அரங்கில் இருந்த மக்கள் ஆர்பரித்துள்ளனர். பலருக்கு இதற்கான அர்த்தம் அப்போது தெரியாமல் இருந்தது.

கால்பந்து : வரலாற்றில் முதன்முதலாக கொடுக்கப்பட்ட 'White Card' - விரிவான தகவல்கள்
ரொனால்டோ: Personal Chef-ஐ தேடும் கால்பந்து வீரர் - மாதம் ரூ.4.5 சம்பளம், நிபந்தனைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com