Rishabh Pant: "அவரது Come Back முக்கியம்" கோவிலில் பண்ட்டிற்காக வழிபட்ட இந்திய வீரர்கள்!

சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர், உடன் இந்திய அணி நிர்வாகிகள் சிலரும் உஜ்ஜைன் கோவிலுக்கு திங்களன்று காலை சென்றனர். அங்கு பண்ட் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்பவேண்டும் என சிறப்பு வழிபாடு செய்ததாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
Rishabh Pant: "அவரது கம்பேக் முக்கியம்" கோவிலில் பண்ட்டிற்காக வழிபட்ட இந்திய  வீரர்கள்!
Rishabh Pant: "அவரது கம்பேக் முக்கியம்" கோவிலில் பண்ட்டிற்காக வழிபட்ட இந்திய வீரர்கள்!ட்விட்டர்
Published on

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்பவேண்டும் என உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர் சக வீரர்களான சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர்.

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி ரிஷப் பண்ட் ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர், பல அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு, தற்போது ஓய்வு பெற்று வருகிறார். ரிஷப் பண்ட் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவது கடினம் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>Rishabh Pant</p></div>

Rishabh Pant

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்துடன் மோதுகிறது இந்தியா. இதில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்து, இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டிக்காக மத்திய பிரதேசம் சென்றுள்ளது இந்திய அணி.

இந்நிலையில், ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர் இந்திய அணி வீரர்கள்.

Rishabh Pant: "அவரது கம்பேக் முக்கியம்" கோவிலில் பண்ட்டிற்காக வழிபட்ட இந்திய  வீரர்கள்!
IPL : "ரிஷப் பண்ட் விளையாடாவிட்டாலும்" - டெல்லி அணியின் கோச் ரிக்கி பாண்டிங் சொன்னது என்ன?

சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர், உடன் இந்திய அணி நிர்வாகிகள் சிலரும் உஜ்ஜைன்கோவிலுக்கு திங்களன்று காலை சென்றனர்.

அங்கு பண்ட் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்பவேண்டும் என சிறப்பு வழிபாடு செய்ததாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

"ரிஷப் பண்ட்டின் கம்பேக் அணிக்கும் எங்களுக்கும் மிகவும் அவசியமானது. நியூசிலாந்திற்கு எதிராக தொடரை நாங்கள் ஏற்கனவே கைப்பற்றி விட்டோம். மூன்றாவது போட்டியை எதிர்நோக்கியிருக்கிறோம்" என்றார்

Rishabh Pant: "அவரது கம்பேக் முக்கியம்" கோவிலில் பண்ட்டிற்காக வழிபட்ட இந்திய  வீரர்கள்!
Rishabh Pant Accident : உயிரைக் காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு மத்திய அரசின் விருது அறிவிப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com