T20WC: அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி; டிரெண்டாகும் #chokers - என்ன நடந்தது?

க்ரூப் 2வில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் விளையாடுகின்றன. இதில் முதலிடத்தில் 6 புள்ளிகளுடன் இந்திய அணியும், இரண்டாவது இடத்தில் 5 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்காவும் இருந்தன.
India qualifies for the semis
India qualifies for the semistwitter
Published on

இன்று நடந்து முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் வென்றது நெதர்லாந்து அணி. இதனால் இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிக்குள் நுழைந்திருக்கிறது.

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 12 அணிகள், 2 பிரிவுகளில் விளையாடுகிறது. க்ரூப் 1ல் ஏற்கனவே நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் போட்டிகளில் விளையாடி தலா 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. க்ரூப்1ல் அனைத்து அணிகளுக்கான போட்டிகள் நிறைவடைந்துவிட்டன.

க்ரூப் 2வில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் விளையாடுகின்றன. முதலிடத்தில் 6 புள்ளிகளுடன் இந்திய அணியும், இரண்டாவது இடத்தில் 5 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்காவும் இருந்தன.

இந்நிலையில், இன்று, ஞாயிற்றுக் கிழமை (6 நவம்பர்) அன்று க்ரூப் 2வில் மீதமிருக்கும் போட்டிகள் நடைபெறும். அதில் காலை நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி நெதர்லாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி, 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்திருந்தது.

159 என்ற இலக்கை துரத்தி விளையாடிய தென் ஆப்ரிக்கா, 20 ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து, 8 விக்கெட்களை இழந்திருந்தது. 13 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி நெதர்லாந்திடம் தோற்றது. இதனால், அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து, தொடரில் இருந்து வெளியேறியுள்ளது தென் ஆப்ரிக்கா. வெளியேறும் கையோடு அவர்களையும் அழைத்து சென்றுள்ளது நெதர்லாந்து!

இன்று மதியம் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நடைபெறும் முன்னரே இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய மூன்று அணிகளுக்கும் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது

India qualifies for the semis
IndvsPak: கோலியின் ஆட்டத்தால் 1 மணி நேரம் சரிந்த UPI பரிவர்த்தனை! நிபுணர் பகிர்வு வைரல்

உலகக் கோப்பைக்கும் தென் ஆப்ரிக்காவுக்கும் எப்போதும் எழாம்பொருத்தம் தான்! இதுவரை நடந்த எந்த உலகக்கோப்பை தொடரையும் வென்றதில்லை இவர்கள் அணி. முக்கிய போட்டிகளில் சொதப்பலாக ஆடி கோட்டை விடுவது இது முதல்முறையல்ல. இதனால் டிவிட்டரில் #chokers என்ற வார்த்தை டிரெண்டாகி வருகிறது.

தென் ஆப்ரிக்காவை கிண்டலடித்து மீம்களையும் தெறிக்கவிட்டுள்ளனர் இணையவாசிகள்!

India qualifies for the semis
IND vs BAN: டிவிட்டரில் டிரெண்டாகும் #cheating - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com