Badminton : தாமஸ் கோப்பை - இறுதிக்கு சென்றது இந்திய அணி

தாமஸ் கோப்பை இறுதிக்கு பல வருடங்கள் கழித்து முதன்முறையாக முன்னேறியுள்ள இந்திய பேட்மின்டன் ஆடவர் அணி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
Men' Badminton Team-India
Men' Badminton Team-IndiaTwitter
Published on

தாமஸ் கோப்பை பேட்மின்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்துவருகிறது. இதில் பல ஆண்டுகள் கழித்து அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் பேட்மின்டன் அணி, அரையிறுதியில் டென்மார்க்கை எதிர்கொண்டது. விறுவிறுப்புடன் சென்ற போட்டியில், 3-2 என்ற கணக்கில் இந்திய வீரர்கள் டென்மார்க்கை வீழ்த்தினர்.

1979 பின், 43 ஆண்டுகளாக அரையிறுதிக்கு கூட முன்னேறாத இந்திய அணி, இம்முறை முன்னேறியது மட்டுமல்லாமல், 2016ல் கோப்பை வென்ற டென்மார்க்கை வீழ்த்தி இப்போது இறுதிக்கும் சென்றுள்ளது. 2-2 என்ற புள்ளிகளில் வெற்றி யார் பக்கம் என்று நகத்தை கடித்துக்கொள்ளும் அளவிற்கு ஆட்டம் சூடுபிடிக்க, பிரணாய் கடைசி நிமிடத்தில் தன் முழுவீச்சில் இறங்கி இந்திய அணியை வெற்றிக்கு கூட்டிச் சென்றார்.

Men' Badminton Team-India
Men' Badminton Team-IndiaTwitter

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கிடம்பி ஸ்ரீகாந்த் மற்றும் இரட்டையர் பிரிவில் உலக தர வரிசையில் 8வது இடத்தில் இருக்கும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிசெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி விளையாடி, வெற்றிபெற்று இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமநிலையிலிருந்தது.

அதன் பின் இந்திய அணியின் இறுதிப்போட்டி கனவு பிரணாயின் கைகளில் விழ, கணுக்காலில் காயம் ஏற்பட்டது இவருக்கு.

Men' Badminton Team-India
Men' Badminton Team-IndiaTwitter

கணுக்காலில் காயம் ஏற்பட்டபின் சிறிது நேரம் டைம் அவுட் எடுத்துக்கொண்ட பிரணாய், மீண்டும் களமிறங்கி ரஸ்மஸ் கம்கேவிற்கு எதிராக விளையாடினார். 13-21 21-9 21-12 என்ற செட் கணக்கில் இந்திய அணி வென்றது. "காயம் ஏற்பட்டபின் சரியாக விளையாட முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். வலி அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்ற வேண்டிக்கொண்டிருந்தேன். விளையாட ஆரம்பித்ததும் வலி குறைந்தது ஊக்கமாக இருந்தது" என்றார் பிரணாய்.

இந்த வெற்றிக்கு பின் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது. 14 முறை சாம்பியன்ஷிப் வென்ற இந்தோனேசியா, ஜப்பான் அணியை வீழ்த்தி இறுதிக்கு சென்றுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தோனேசியா- இந்தியா மோதவுள்ளனர்.

இவர்களது வெற்றிக்கு வாழ்த்துக்கூறி, இறுதிபோட்டிக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லியிருக்கிறார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com