IPL 2022 : DD  vs  LSG - டெல்லியை வீழ்த்திய உத்திரபிரதேசம் - என்ன ஆச்சு ?

எளிமையான இலக்கை துரத்திய லக்நௌ 20 வது ஓவரில் வென்றது. அந்த அணியின் தொடக்க வீரர் குயின்டன் டீ காக் 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அசத்தினார். அவரே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
IPL 2022 : DD  vs  LSG
IPL 2022 : DD  vs  LSGNewsSense

இந்த ஐபிஎல் சீசனில் என்னவோ குஜராத்தும், உத்தரபிரதேசமும் போட்டி போட்டுகொண்டு அடித்து ஆட, கொல்கத்தா மட்டுமே இவர்களை சமாளித்துக் கொண்டிருக்கிறது. 

டெல்லி, மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஐதராபாத் என ஒரு காலத்தில் கோலோச்சிய அணிகள் எல்லாம் துவண்டு போய் கிடக்கின்றன. 

நேற்றைய ஐபிஎல் ஆட்டம் சுவாரசியமின்றி சப்பென முடிந்தது. டாஸ் வென்ற உத்தரபிரதேச அணியான லக்நௌ சூப்பர் ஜெயன்ட்ஸ்  டெல்லி கையில் பேட்டிங்கை கொடுத்தது. 

ஆடு, எவ்வளவு  தூரம் போகுறனு பார்க்கலாம் என லக்நௌ சொல்ல, டெல்லி அணியோ ஆஸ்திரேலியாவில் இருந்து அதிரடி மன்னன் வார்னரை களமிறக்கியது.  ஆனால் உள்ளூர் சூழலை புரிந்துகொண்ட, தரைமட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட உத்தரபிரததேச அணி  மிகப்பெரிய நட்சத்திர பௌலர்கள் ஏதுமின்றி இளைஞர்களை வைத்தே டெல்லியின் கதையை முடித்தது. 

ஆம். டெல்லி அணி நேற்றைய போட்டியில் 20 ஓவர்கள் பேட்டிங் முடித்திருந்த நிலையில் மூன்று விக்கெட்டுகள் மட்டும் தான் இழந்தியிருந்தது. ஆனால் மொத்த ஸ்கோர் 150-ஐ தொடவில்லை. இத்தனைக்கும் டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா வெறும் 34 பந்துகளில் ஒன்பது பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 61 ரன்கள் எடுத்தார்.

ஆனால் வார்னர் 12 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரிஷப் பந்த், சர்ஃபிராஸ் கான் உள்ளிட்டோரும் அதிரடி இன்னிங்ஸ் ஆட வில்லை.

எளிமையான இலக்கை துரத்திய லக்நௌ 20 வது ஓவரில் வென்றது. அந்த அணியின் தொடக்க வீரர் குயின்டன் டீ காக் 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அசத்தினார். அவரே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

IPL 2022 : DD  vs  LSG
IPL : Bowlers Who Have Taken the Most Wickets in History

உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத்தை சாதாரணமாக எடை போட்ட பலம்பெரும் பெருச்சாளிகளுக்கு இவ்விரு அணிகளும் தங்களது வியூகத்தால் பதிலடி கொடுத்து வருகின்றன.

சென்னை, மும்பை, ஐதராபாத் அணிகள் இனியாவது மீளுமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

டெல்லி அணியும் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com