2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை எந்த வீரரும் பெறாத அதிக தொகை இது. இதனால், ஐபிஎல்லின் விலையுயர்ந்த வீரராகிறார் சாம் கரன்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரும், பார்ட் டைம் பேட்டருமான சாம் கரன், இந்தியன் ப்ரீமியர் லீகில் கடந்த வருடங்களில் சென்னை அணிக்காக விளையாடி வந்தார்.
குறுகிய காலத்தில் இவரது அபார திறமையால் கிரிக்கெட் உலகில் பிரபலமடைந்த இவர், சென்னை அணியின் வெற்றிக்கு பல முறை வழிவகுத்திருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் சுட்டிக்குழந்தை என்ற செல்லப் பெயரும் இருக்கிறது.
நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பையிலும் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதினை வென்றார்
இந்த வருடத்திற்கான ஐபிஎல் ஏலத்திற்கு சாம் கரனை விடுவித்தது சென்னை அணி.
நீண்ட நேரமாக மும்பை, சென்னை,ராஜஸ்தான், லக்னோ, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் இவரை வாங்க நினைத்து தொடர்ந்து போட்டிப்போட்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்து அணிகளும் விலகிய நிலையில், பஞ்சாப் அணி சாம் கரனை ரூ.18.5 கோடிக்கு வாங்கியுள்ளது.
இதன் மூலம் மீண்டும் அவர் பஞ்சாப் அணிக்கு திரும்பியுள்ளார். சென்னை அணி சுட்டிக்குழந்தையை வாங்கும் முன்னர் இவர் பஞ்சாப் அணியில் தான் இருந்தார்.
சாம் கரனை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் ரூ.17.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust