மீண்டும் மழையால் தடையான போட்டி
மீண்டும் மழையால் தடையான போட்டிட்விட்டர்

IPL 2023 Finale Live: மீண்டும் மழையால் தடையான போட்டி

215 என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கிய நிலையில், மழையின் காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 3 பந்துகள் வீசப்பட்டு, சென்னை அணி 4 - 0 என்ற நிலையில் உள்ளது

டாஸ் வென்றது csk 

சரியாக 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸை வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்துள்ளார்.

8 ரன்கள்

இரண்டு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி

6

தீபக் சகர் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தை 6 விளாசினார் சாகா

தீபக் சகரின் எக்ஸ்பென்சிவ் ஓவர்

3வது ஓவரில் 16 ரன்கள் விட்டுகொடுத்துள்ளார் தீபக் சகர்

துஷார் தேஷ்பாண்டே வீசிய 4வது ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

இன்னும் விக்கெட் இல்லை

பவர் பிளே முடிவில் குஜராத் வீரர்கள் 62 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இன்னும் எந்த விக்கெட்டையும் வீழ்த்தவில்லை சென்னை அணி.

விழுந்தது முதல் விக்கெட்

ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார் கில். அதிவிரைவாக ஸ்டம்பிங்க் செய்த தோனி

அரைசதம் கடந்த சாஹா!

குஜராத் அணியின் தொடக்க வீரர் ரித்திமான் சாஹா அரைசதம் கடந்தார்

இரண்டாவது விக்கெட்டை இழந்த குஜராத் அணி

குஜராத் அணியின் தொடக்க வீரர் ரித்திமான் சாஹா அரைசதம் அடித்திருந்த நிலையில் தீபக் சாஹரின் பந்தில் விக்கெட்டை இழந்துள்ளார். சாஹாவை தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்டிய களமிறங்கியுள்ளார்

பௌண்டரி மழை பொழியும் தமிழக வீரர் சாய் சுதர்சன்

குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் சாய் சுதர்ஷன் துஷார் தேஷ்பாண்டேவின் ஓவரில் சிக்சர்களும் ஃபோர்களுமாக விளாசி வருகிறார். அவருடைய தற்போதைய ஸ்கோர் 76. குஜராத் அணியின் தற்போதைய ஸ்கோர் 173 - 2

ட்விட்டரில் கதறும் சிஎஸ்கே!

குஜராத் அணியில் களமிறங்கும் ஒரு ஒரு வீரரும் அரைசதம் கடக்க, சென்னை அணி பௌலர்கள் விக்கெட்களை எடுக்க ஒரு பக்கம் தடுமாற, ஃபீல்டிங்கிலும் சொதப்பிக்கொண்டிருக்கிறது சிஎஸ்கே.

4 ரன்களில் சென்சுரியை மிஸ் செய்த சாய் சுதர்சன்!

சிக்சர்களும் ஃபோர்களுமாக விளாசிய தமிழ்வாட்டு வீரர் சாய் சுதர்ஷன் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பதிரனா ஓவரில் ஆட்டமிழந்துள்ளார்

சென்னை அணிக்கு 215 ரன்கள் இலக்கு

மீண்டும் மழையால் தடையான போட்டி

logo
Newssense
newssense.vikatan.com