150 என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் கொடுக்கப்பட்ட மிக எளிதான இலக்கை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் 13.1 ஓவரில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியான ஆட்டத்தாலும், யுசுவேந்திரா சாஹலின் சுழல் வேகத்திலும் வீழ்ந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
ஐபிஎல் 2023ன் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்த ராஜஸ்தான் அணிக்கு பல நாட்கள் கழித்து கைக்கொடுத்தார் வெங்கடேஷ் ஐயர். அவர் மட்டுமே 57 ரன்களை எடுத்திருந்தார்.
மற்ற வீரர்கள் குறைவான ரன்களிலேயே விக்கெட்களை இழந்து பெவிலியன் திரும்பினர். சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சிறப்பாக பந்துவீசினார். 4 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனால் 20 ஓவர்களின் முடிவில் கேகேஆர் அணி 149 ரன்களையே எடுத்தது. 150 என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் பட்லர் ஏமாற்றம் அளித்தார். டக் அவுட் ஆகி அவர் ஒரு பக்கம் திரும்ப, மற்றொரு புறம் கேப்டன் சஞ்சு சாம்சன் உடன் கைக்கோர்த்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அதிரடி காட்டினார்.
பௌண்டரிகளில் மட்டுமே பேசிய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் கடந்தார். தற்போது இதுவே ஐபிஎலில் வரலாற்றில் அதிவேக அரைசதம்! தொடர்ந்து பொறுப்பாக ஆடிய சாம்சன் ஜெய்ஸ்வால் ஜோடி, 13 ஓவர்களில் இலக்கை அடைந்து அணியை வெற்றிப்பெற்ற வைத்தது. சஞ்சு சாம்சன் 48 ரன்கள் எடுத்திருந்தார்.
போட்டி முடிந்து பேசிய ஜெய்ஸ்வால், “கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் முன்னிலையில், அவர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஐபிஎல் இளைஞர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை அளிப்பதை பாராட்டுகிறேன். இது எங்களை இன்னும் முன்னேற உதவும். நான் எனது விளையாட்டை எஞ்சாய் செய்கிறேன்
சதம் அடிப்பது முக்கியமல்ல, அணியை வெற்றிபெற செய்வதே எனது கவனமாக இருந்தது. வெற்றியை சீக்கிரம் பெற்றால், ரன்ரேட் அதிகரிக்கும் என்பதை உணர்ந்தேன், அதற்கேற்றவாறு விளையாடினேன்” என்றார்.
நேற்றைய போட்டியின் ஸ்டார் ஜெய்ஸ்வால் மட்டுமல்ல, சாஹலும் தான். நேற்று 4 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் சாஹல்.
”இந்த சாதனையை படைப்பேன் என்று நான் விளையாட தொடங்கியபோது நினைத்து பார்க்கவில்லை. முதல் மூன்று ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினேன், பின்னர் 2014 முதல் எனது பயணம் தொடங்கியது. நிறைய மேடு பள்ளங்களை கடந்து வந்திருக்கிறேன், அதேபோல நிறைய கொண்டாடியும் இருக்கிறேன் நான் எனது இந்த பயணத்தை” என்றார் சாஹல்.
மொத்த ஐபிஎல்லில் 187 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார், மேலும் இந்த சீசனில் 21 விக்கெட்களை வீழ்த்தி பர்ப்பிள் தொப்பிக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
சாஹலுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவெயின் பிராவோ அதிக விக்கெட்களை (184) வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust