IPL 2023: தொடர்ந்து லக்னோவிடம் தோற்கும் மும்பை இந்தியன்ஸ் - பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டதா?

14 புள்ளிகளுடன் தற்போது 4வது இடத்தில் இருக்கும் அணிக்கு அடுத்தபடியாக வரிசைக்கட்டி நிற்கின்றன பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள்
IPL 2023: தொடர்ந்து லக்னோவிடம் தோற்கும் மும்பை இந்தியன்ஸ் - பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டதா?
IPL 2023: தொடர்ந்து லக்னோவிடம் தோற்கும் மும்பை இந்தியன்ஸ் - பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டதா?twitter
Published on

நேற்றின் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸிடம் தோற்றதால் பிளே ஆஃப் செல்லும் பாதை சற்றே கடினமாகியுள்ளது மும்பை அணிக்கு.

டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்த மும்பை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கத்தை கொடுத்தனர் பந்துவீச்சாளர்கள். 6 ஓவர்களில் 35க்கு 3 விக்கெட்களை இழந்திருந்த நிலையில், மார்கஸ் ஸ்டாயினிஸ் வந்தார் லக்னோ அணிக்கு.

47 பந்துகளில் 89 ரன்களை அவர் குவிக்க மறுபுறம் கேப்டன் க்ருனால் பாண்டியா 49 ரன்கள் எடுத்தார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 177 ரன் எடுதத்து.

மும்பை அணிக்கு ரோஹித் மற்றும் இஷான் கிஷன் வலுவான தொடக்கத்தை கொடுத்தாலும், அவர்களின் விக்கெட் பறிபோன பிறகு தடுமாறத் தொடங்கியது

IPL 2023: தொடர்ந்து லக்னோவிடம் தோற்கும் மும்பை இந்தியன்ஸ் - பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டதா?
CSK vs KKR: சேப்பாக்கில் CSKவின் கடைசி போட்டி - தோற்றபின் கேப்டன் தோனி பேசியது என்ன?

வழக்கம் போல டிம் டேவிட் கடைசி வரை போராடியதில் மும்பை இந்தியன்ஸ் அணி 172 ரன்கள் எடுத்து 5 ரன் குறைவில் தோற்றது. கடைசி ஓவரை லக்னோ அணிக்காக வீசிய மோஹின் கான், 11 ரன்களை மிக எளிதாக டிஃபெண்ட் செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மும்பைக்கு சற்றே சவாலாக வந்துள்ளது.

மீதமிருக்கும் ஒரு லீக் போட்டியில் நல்ல ரன்ரேட்டுடன் வென்றால் மட்டுமே வாய்ப்பு. 14 புள்ளிகளுடன் தற்போது 4வது இடத்தில் இருக்கும் அணிக்கு அடுத்தபடியாக வரிசைக்கட்டி நிற்கின்றன பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள்

தற்போதைய நிலவரப்படி, நடப்பு சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் அணி முதலாவதாக பிளே ஆஃப்க்கு முன்னேறியுள்ளது.

IPL 2023: தொடர்ந்து லக்னோவிடம் தோற்கும் மும்பை இந்தியன்ஸ் - பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டதா?
"நாங்கள் Playoffsக்கு செல்ல தகுதியானவர்களே” - குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com