IPL 2023: முதல் சதம் அடித்த SKY; சளைக்காத ராஷீத் - Play Off வாய்ப்பை தக்கவைத்ததா MI?

சூர்யகுமார் யாதவுக்கு இதுவே முதல் ஐபிஎல் சதம். இரண்டாவதாக களமிறங்கிய குஜராத் அணி 55 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே 5 விக்கெட்கள் இழந்தது. மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்த எதிரணி தடுமாறியது
IPL 2023: முதல் சதம் அடித்த SKY; சளைக்காத ராஷீத் - Play Off வாய்ப்பை தக்கவைத்ததா MI?
IPL 2023: முதல் சதம் அடித்த SKY; சளைக்காத ராஷீத் - Play Off வாய்ப்பை தக்கவைத்ததா MI?Twitter
Published on

சிக்சர்களும் பௌண்டரிகளும் பறக்கவிட்டு சூர்யகுமார் யாதவ் சதமடிக்க, 27 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இது அணியின் பிளே ஆஃப் வாய்ப்பையும் பிரகாசமாக்கியுள்ளது.

டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்த குஜராத் அணி, மும்பை இந்தியன்ஸ் டீமின் பிளான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், மிஸ்டரி ஸ்பின்னர் ரஷீத் கான் வழக்கம் போல பவர் பிளேவில் மும்பை மேல் வரிசையை காவு வாங்கினார்.

சீசன் தொடங்கியதிலிருந்து சற்றே ஃபார்ம் அவுட் ஆக இருந்தார் சூர்யகுமார் யாதவ். இந்த போட்டி மும்பை அணிக்கும், அவருக்குமே முக்கியமான போட்டியாக இருந்தது. வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சூர்யகுமார் யாதவ், அதிரடியாக விளையாட தொடங்கினார்.

புதிய வீரர் விஷ்ணு வினோத் உடன் இணைந்து பொறுப்பாக ஸ்ட்ரைக் ரொடேட் செய்ய, சூர்யகுமார் யாதவ் வானவேடிக்கை காட்டினார். 49 பந்துகளில் சதமடித்து, அணியின் இறுதி ஸ்கோரை 218 ஆக உயர்த்தினார்.

சூர்யகுமார் யாதவுக்கு இதுவே முதல் ஐபிஎல் சதம். இரண்டாவதாக களமிறங்கிய குஜராத் அணி 55 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே 5 விக்கெட்கள் இழந்தது. மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்த எதிரணி தடுமாறியது

IPL 2023: முதல் சதம் அடித்த SKY; சளைக்காத ராஷீத் - Play Off வாய்ப்பை தக்கவைத்ததா MI?
Pathirana: தோனி பாராட்டும் இந்த இளைஞர் யார்? இவரை ‘Baby Malinga’ என்றழைப்பது ஏன்?

போட்டி மும்பை கைவசம் என்று நினைத்த அனைவருக்குமே அதிரடி ட்விஸ்ட் கொடுத்தார் ஆப்கான் வீரர் ராஷீத் கான். 8 விக்கெட்களை இழந்திருந்த நிலையில், களமிறங்கிய ராஷீத், சிக்சர்களும் ஃபோர்களும் விளாசினார். 20 ஓவர் முடிவில், 191 ரன்களை எடுத்திருந்தது குஜராத் அணி.

வெறும் 27 ரன்களே குறைவாக இருந்தது வெற்றிக்கு. “எனக்கு பயம் இல்ல, அதுக்கு இதான் சாம்பிள்” என்பது போல இருந்தது ராஷீத்தின் ஆட்டம்.

வெற்றிபெற்ற மும்பை அணி, 14 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இன்னும் வலுவாக்கிக்கொண்டுள்ளது. தோற்றாலும் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

சீசன் தொடக்கத்தில் படுமோசமாக இருந்த மும்பை அணி கொடுத்துள்ள கம் பேக், தனது ஆறாவது கோப்பைக்கு அடிபோடுவதாகவே இருக்கிறது

IPL 2023: முதல் சதம் அடித்த SKY; சளைக்காத ராஷீத் - Play Off வாய்ப்பை தக்கவைத்ததா MI?
Dhoni: சேப்பாக்கத்தில் களமிறங்கிய தோனி; எச்சரித்த ஸ்மார்ட் வாட்ச்- ஏன்? |Viral புகைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com