IPL 2023: இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும்?

இறுதிப்போட்டியில் மோதவுள்ள அணிகளில் வெல்லும் அணி, தோல்வியுறும் அணிக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
IPL 2023: இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும்?
IPL 2023: இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும்?ட்விட்டர்
Published on

2023ஆம் ஆண்டின் ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று, மே 28, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

இந்த இறுதிப்போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம்,

  • இதுவே தோனியின் கடைசி ஐபிஎல் ஆக இருக்கலாம்

  • சென்னை அணி வென்றால், இது அவர்களின் 5வது கோப்பை (மும்பையின் சாதனையை சமன் செய்யும் சிஎஸ்கே)

  • குஜராத் அணிக்கு இது இரண்டாவது கோப்பை

இதனால், இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டிகான ஆரவாரமும் எதிர்பார்ப்பும் மேலோங்கியிருக்கிறது.

பரிசுத் தொகை

ஐபிஎல் போட்டிகளில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஒரு போட்டிக்கு கிட்டதட்ட 118 கோடி பிசிசியை லாபம் ஈட்டுகிறது என முன்பு ஒரு பதிவில் பார்த்தோம் . இந்நிலையில், இறுதிப்போட்டியில் மோதவுள்ள அணிகளில் வெல்லும் அணி, தோல்வியுறும் அணிக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் தளத்தின் அறிக்கையின்படி, இறுதிபோட்டியில் பரிசுத் தொகையாக ரூ.46.5 கோடி ரூபாய் மொத்தமாக வழங்கப்படவுள்ளது.

அதில் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி கிடைக்கவுள்ளது. இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.13 கோடி வழங்கப்படும். மூன்றாவது இடத்தில் இருக்கும் அணிக்கு (மும்பை இந்தியன்ஸ்) ரூ.7 கோடியும், நான்காவதி இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரூ.6.5 கோடி கிடைக்கும்.

IPL 2023: இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும்?
"நாங்கள் Playoffsக்கு செல்ல தகுதியானவர்களே” - குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பேசியது என்ன?

ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப்

மேலும் அந்த தளத்தின் அறிக்கையின்படி, ஆரஞ்சு கேப் மற்றும் பர்ப்பிள் கேப் வெல்லும் வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

ஒரு ஐபிஎல் பருவத்தில் அதிக ரன்களை சேகரிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்களை வீழ்த்தும் வீரருக்கு பர்ப்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

தவிர, இந்த சீசனின் எமர்ஜிங் பிளேயர் விருதை பெரும் வீரருக்கு ரு.20 லட்சம் வழங்கப்படவுள்ளது.

இந்த சீசனின் Most valuable player விருதை வெல்லும் வீரருக்கு ரூ.12 லட்சம், பவர் பிளேயர் விருதை வெல்பவருக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும்

IPL 2023: இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும்?
CSK: 10வது முறையாக ஃபைனலுக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்- என்ன பேசினார் கேப்டன் தோனி?

2008 முதல்...

2008 - 09 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடங்கியபோது வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.4.8 கோடி வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2.4 கோடி.

2010-13 வரை வெல்லும் தோற்கும் அணிக்கு தொகையாக முறையே ரூ.10 கோடி மற்றும் 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது

2014-15ல் வெல்லும் அணி ரூ.15 கோடி பெற்றது. 2016 ஆம் ஆண்டு முதல் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டு வருகிறது

IPL 2023: இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும்?
FIFAWC: இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு கிடைக்கப் போகும் பரிசு தொகை எவ்வளவு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com