ISPL T10 : கிரிக்கெட்டிலும் தடம் பதித்த நடிகர் சூர்யா! எப்படி தெரியுமா?

ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ISPL T10 : கிரிக்கெட்டிலும் தடம் பதித்த நடிகர் சூர்யா! எப்படி தெரியுமா?
ISPL T10 : கிரிக்கெட்டிலும் தடம் பதித்த நடிகர் சூர்யா! எப்படி தெரியுமா?Twitter

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பு நிறுவனம், அகரம் அறக்கட்டளை என பல பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா கிரிக்கெட்டிலும் தடம் பதித்துள்ளார். அதாவது, டி10 தொடர் தற்போது இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது.

இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.

2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' திரைப்படத்திலும், 'வாடிவாசல்', 'சூர்யா 43' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் சூர்யா .

ISPL T10 : கிரிக்கெட்டிலும் தடம் பதித்த நடிகர் சூர்யா! எப்படி தெரியுமா?
7ஆம் அறிவு படத்தில் வந்த Reservation வசனம்; நீக்கச் சொன்ன சூர்யா, மறுத்த உதயநிதி - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com