விராட் கோலி : "போர் கண்ட சிங்கம்" - 2023ம் ஆண்டில் செய்த சாதனைகள் என்ன?

விராட் தனது கிரிக்கெட் கெரியரில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர். குறிப்பாக கடந்த 2020,2021,20211 ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியாத துரதிர்ஷ்ட வசமான சூழல் நிலவியது.
விராட் கோலி : "போர் கண்ட சிங்கம்" - 2023ம் ஆண்டில் செய்த சாதனைகள் என்ன?
விராட் கோலி : "போர் கண்ட சிங்கம்" - 2023ம் ஆண்டில் செய்த சாதனைகள் என்ன?Twitter

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இவரது கிரிக்கெட் கெரியரில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர்.

குறிப்பாக கடந்த 2020,2021,20211 ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியாத துரதிர்ஷ்ட வசமான சூழல் நிலவியது. அதனை முறியடித்து 2023 ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசினார்.

விராட் கோலிக்கு 2023ம் ஆண்டு மிகவும் நல்ல ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் அவர் செய்த சதனைகள் குறித்துப் பார்க்கலாம்.

2023ல் விராட் கோலி 36 இன்னிங்ஸ் விளையாடி, 66 சராசரியுடன் மொத்தமாக 2048 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 8 சதங்கள், 10 அரை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 24 இன்னிங்ஸ் விளையாடி 1,377 ரன்களை எடுத்துள்ள கோலி, 6 சதம், 8 அரை சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 671 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார்.

2023ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கார். இதுவரை இல்லாத அளவில் ஒரு உலகக்கோப்பை தொடரில் 765 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்திருக்கிறார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதம் சாதனையை கோலி முறியடித்தார். நியூசிலாந்துக்கு எதிராக கோலி அடித்த சதம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் அடித்த 50வது சதமாகும். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

2023-ல் 2000 ரன்களை கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை 7 முறை கடந்த வீரர் என்ற உலக சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர் இலங்கை அணியின் குமாரா சங்கக்காரா இந்த சாதனையை 6 முறை நிகழ்த்தியிருந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தபோது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

21வது முறையாக தொடர் நாயகன் விருதை கைப்பற்றி, அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார்.

வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக சதமடித்தவர், ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்கள் அதிக முறை அடித்த வீரர், இந்தியாவின் வெற்றிக்கான பங்களிப்பில் அதிக முறை 50க்கும் அதிகமான ரன்களை அடித்த வீரர் என விராட் கடந்த ஆண்டு செய்த சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

விராட் கோலி : "போர் கண்ட சிங்கம்" - 2023ம் ஆண்டில் செய்த சாதனைகள் என்ன?
IPL Auction: தோனி முதல் பேட் கம்மின்ஸ் வரை - அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்ட வீரர்கள் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com