LSG vs CSK Live: பத்திரனாவின் வலையில் விழுந்த பூரான்!
LSG vs CSK Live: பத்திரனாவின் வலையில் விழுந்த பூரான்!twitter

LSG vs CSK Live: மழையால் தடைப்பட்ட போட்டி!

முதல் இன்னிங்ஸ் முடிய இன்னும் 4 பந்துகளே உள்ள நிலையில், மழைக்காரணமாக ஆட்டம் தடைப்பட்டுள்ளது

டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங் தேர்வு!

மோசமான வானிலை காரணமாக இன்றைய சிஎஸ்கே எலெஸ்ஜி போட்டி தாமதமான நிலையில், தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக விளையாடாமல் இருந்த சென்னை அணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்று விளையாடுகிறார். ஆகாஷ் சிங் வெளியேற்றப்பட்டுள்ளார்

முதல் ஓவர் முடிவில் 5-0

அணிக்கு திரும்பிய தீபக் சாஹர், முதல் ஓவரை வீசினார். முதல் ஓவர் முடிவில், ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்கள் எடுத்துள்ளது லக்னோ அணி. கைல் மேயர்ஸ், மனன் வோரா லக்னோ அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்

ஒரே ஒரு ரன் வழங்கிய துஷார்!

இரண்டாவது ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே வெறும் ஒரு ரன்னையே வழங்கியுள்ளார்

முதல் விக்கெட்டை இழந்த லக்னோ

லக்னோ அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மோயின் அலி வீசிய 4வது ஓவரில், பந்தை பவுண்டரிக்கு விளாச முயற்சித்து ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார் கைல் மேயர்ஸ்

விழுந்தது அடுத்த விக்கெட்!

மஹீஷ் தீக்‌ஷனாவின் சுழலில் சிக்கினார் மனன் வோரா. 10 ரன்களுக்கு வெளியேறினார்

வந்த வேகத்தில் திரும்பிய குருனால்!

தனது முதல் பந்தை எதிர்கொண்ட லக்னோ அணியின் கேப்டன் குருனால் பாண்டியா, ஸ்லிப்பில் ராஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார்!

பவர்பிளே முடிவில் மூன்று விக்கெட் இழப்பு!

ஸ்டாயினிஸ் அவுட்!

சென்னை அணியின் சுழலுக்கு தடுமாறும் லக்னோ அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வருகின்றனர். ஜடேஜா வீசிய முதல் ஓவரிலேயே, அதிரடி ஆட்டக்காரர் ஸ்டாயினிஸை வெளியேற்றினார்

லக்னோ 44-5! சரியும் பேட்ஸ்மன்கள் !

இன்னும் 10 ஓவர் கூட முடிவடையாத நிலையில், 44 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்துள்ளது லக்னோ அணி

லக்னோ வீரர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் சென்னை அணி!

16வது ஓவர் முடிவடைந்திருக்கும் நிலையில், 5 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களையே எடுத்துள்ளது லக்னோ அணி

மழையால் தடைப்பட்ட போட்டி!

முதல் இன்னிங்ஸ் முடிய இன்னும் 4 பந்துகளே உள்ள நிலையில், மழைக்காரணமாக ஆட்டம் தடைப்பட்டுள்ளது

logo
Newssense
newssense.vikatan.com