சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூத்த வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் டூ ப்ளெசிஸ் ஆகியோர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது. சென்னை அணியின் வழக்கத்துக்கு மாறாக இலங்கை வீரர் ஒருவரை அணியில் எடுத்துள்ளதாலும் சென்னை ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கைவிடப்பட்ட சுரேஷ் ரெய்னாவை வேறெந்த அணியும் எடுக்காததால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல்-ல் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ரெய்னா பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. சுரேஷ் ரெய்னாவிடம், உங்களது அடுத்த கட்ட திட்டம் என்ன? அரசியலில் சேர விரும்புகிறீர்களா? என நிரூபர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரெய்னா, “கிரிக்கெட்தான் என்னுடைய ஒரே காதல், உயிர்மூச்சு. கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில்தான் ஈடுபடுவேன். அரசியல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அதுகுறித்த தெளிவும் இல்லை. நான் நல்ல சமையல் காரணாக வர விரும்புகிறேன். அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
உக்ரைனுடன் போர் புரிய விரும்பவில்லை என்றும், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி அதிபருடனான சந்திப்புக்குப் பிறகு இதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். மேலும், அமெரிக்கா மற்றும் நேட்டோ அடைப்புடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக, எந்த சமரசமும் செய்ய முடியாது என்றார். நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்த முடிவை எட்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒரு போதும் ரஷ்யாவிற்குப் போரைத் தொடங்கும் எண்ணமில்லை எனத் தெரிவித்தார். அதேநேரம், சோவியத் நாடுகளை நேட்டோ படைகளில் சேர்க்கக்கூடாது என்ற தங்களது அறிவுறுத்தலுக்கு மேற்குலக நாடுகள் செவிசாய்க்காததே இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார். ரஷ்ய அதிபரின் அறிவிப்பு மற்றும் ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து பின்வாங்கியுள்ளது ஆகியவை உலக நாடுகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். விஜய்க்கே உரித்தான ஸ்டைலிஷான லுக் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைபடத்தின் ஹலமதி ஹபி என தொடங்கும் ‘அரபிக் குத்து’ பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 2.5 கோடி பார்வையாளர்களையும் , 2.2 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில், 10ஆம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான வினாத்தாளும், 12ஆம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான வினாத்தாளும் திருவண்ணாமலையில் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் பரவின. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார், அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பித்தார். இதனிடையே 12ஆம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கான வினாத்தாளும், உயிரியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் வந்தவாசியில் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி திருப்புதல் தேர்வு மாற்றமின்றி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், வணிக கணித பாடமேலும் சென்னையில் உள்ள எந்த பள்ளியிலிருந்து வினாத்தாள் கசிந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வணிக கணித பாடத்தின் திருப்புதல் தேர்வு வினாத்தாளும் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து வரும் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில், ``மாணவர்களை தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுவதால் அதன் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. கட்டாயம் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும்; அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும். அந்த மதிப்பெண் தான் மாணவர்களின் மதிப்பெண்ணாகவும் இருக்கும். ஆகவே திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் தொடர்பாக பெற்றோர், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. அடுத்த மாதம் மற்றொரு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையில் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. அப்போது, டெல்லி செங்கோட்டையிலுள்ள கொடிக் கம்பத்தில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடியை பஞ்சாபி நடிகர் தீப் சித்து என்பவர்தான் ஏற்றினார்.
அதனை அவர் ஒப்புக்கொண்டார். அவர் குறித்து கூறிய விவசாயிகள் அமைப்பு, ‘அவர் ஒரு சீக்கியர் அல்ல. அவர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் என்று குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தீப் சித்து கைது செய்யப்பட்டார். சுமார் 70 நாள்கள் சிறை விசாரணைக்குப் பிறகு ஏப்ரல் 17-ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில், குண்டிலில் - மனேஷ்வர் - பல்வால் விரைவுச் சாலையில் அவர் ஓட்டிவந்த கார் ட்ரக் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.