IPL 2022 : 'எனக்குதான் கடைசி இடம்' - அடம்பிடிக்கும் பங்காளிகள் CSK, மும்பை இந்தியன்ஸ் 

சென்னை ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியில் ஐதராபாத் டாஸ் வென்று சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. ருதுராஜ் தொடர்ச்சியாக மூன்று ஓவர்களில் கடைசி பந்தை பௌண்டரிக்கு விரட்ட, அப்பாடா தம்பி ஃபார்முக்கு வந்துட்டான் என நிம்மதி விட்டான் சென்னை ரசிகன். ஆனால்...
CSK
CSKNewsSense
Published on

2017- மும்பை, 2018 - சென்னை, 2019- மும்பை, 2020 - மும்பை, 2021 - சென்னை

இப்படி ஐபிஎல் தொடரில் கடந்த ஐந்து சீசன்களில் மாறிமாறி கப்பை அடித்த சென்னை, மும்பை அணிகள் இந்த ஐபிஎல் சீசனில் கடைசி இடத்துக்கு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. 

மும்பை, சென்னை, ஹைதராபாத் இந்த மூன்று அணிகளில் எந்த அணி இந்த ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை சுவைக்கபோகிறது எனும் கேள்விக்கு பதில் தேட மதியம் லன்ச்சை முடித்துவிட்டு டிவி அல்லது  ஹாட்ஸ்டார் முன் உட்கார்ந்த சிஎஸ்கே மற்றும் மும்பை ரசிகர்களுக்கு இன்றைய தினம் அடச்சை என முடிந்துபோனது. 

NewsSense

பங்காளிகள் இரு அணிகளும் இன்றைய தினமும் தோல்வியடைந்தன. ஏன் நீங்க ஃபர்ஸ்டு ஜெயிக்குறதது; ஏன் நீங்க ஜெயிக்கிறது என மாறி மாறி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றன.

வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் தான். ஆனால் ஆட்டத்தில் ஒரு சுவாரசியம் வேண்டாமா, குறைந்தபட்சம் வெற்றிக்காக போராடா வேண்டாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பும் விதமாக இந்த இரு அணிகளும் விளையாடியுள்ளன.

மிகவும் சுவாரஸ்யமற்ற போட்டிகளாக இன்றைய இரு மேட்சும் அமைந்தன.

சென்னை கேப்டன் ஜடேஜாவாவது நாமெல்லாம் ஃப்ரொபஷனல்ஸ் அதற்கேற்ப விளையாட வேண்டும் என்று சற்றே கடிந்து கொள்ளும் வகையில் ஆட்டம் முடிந்து பேசினார். ஆனால் ரோகித் ஷர்மா உடல்மொழியெல்லாம் என்னத்த விளையாடி, என்னத்த பௌலிங் போட்டு, டயர்டாக இருக்குப்பா எனும் வகையறாவாகதத் தான் இருந்தது.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

சென்னை ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியில் ஐதராபாத் டாஸ் வென்று சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. ருதுராஜ் தொடர்ச்சியாக மூன்று ஓவர்களில் கடைசி பந்தை பௌண்டரிக்கு விரட்ட, அப்பாடா தம்பி ஃபார்முக்கு வந்துட்டான் என நிம்மதி விட்டான் சென்னை ரசிகன்.

ஆனால் இந்த போட்டியில் முதல்முறையாக ஓவர் போட வந்த நடராஜன் தனது முதல் பந்திலேயே ருதுராஜை வீழ்த்தினார். அதுவும் நடராஜன் யார்க்கரில் நடு ஸ்டம்ப் பறந்தது.

மொயின் அலி - ராயுடு இணை சேதாரத்தை சரி செய்யும் விதமாக விளையாடிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் ராயுடுவை தூக்க, நடராஜன் தூபேவை வீழ்த்தினார்.

தமிழ்நாட்டு பசங்க சென்னை அணியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தபோதும் பாட்ஷா மாணிக்கம் கணக்காக சிரித்தான் சிஎஸ்கே ரசிகன்.

CSK
மாலத்தீவு : இந்த தீவு தேசத்திற்கு செல்வதை ஏன் மிஸ் பண்ணக்கூடாது? - தெரியாத 7 விஷயங்கள்
NewsSense

நல்லவேளையாக தோனி பந்தை விழுங்காமல் ஆறு பந்துகளில் மூன்று ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, ஜடேஜா அதிரடியில் ஒருவழியாக ஸ்கோர் 150-ஐ கடந்தது.

155 ரன்கள் எனும் இலக்குடன் விளையாடிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய வில்லியம்சன் பந்துகளை தடவ, இளம் வீரர் அபிஷேக் பீஸ்ட் மோடில் விளையாடினார்.

13-வது ஓவரில் தான் சென்னை முதல் விக்கெட்டையே கைப்பற்றியது. சென்னை அணி இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் பேட்டிங்கில் நொறுக்கினால் பௌலிங்கில் சொதப்பல், பௌலிங்கில் அசத்தும்போது பேட்டிங்கில் சொதப்பல் என விளையாடிக் கொண்டிருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் பேட்டிங், பௌலிங், பீல்டிங் எல்லாமே படு சுமார்.

ஐபிஎல்லில் முதல் முறையாக தனது அரைசதத்தை பதிவு செய்த் அபிஷேக் 50 பந்துகளில் 70 ரன்கள் அடித்து வீழ்ந்தார். 14 பந்துகள் மீதம் வைத்து எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது ஐதராபாத்.

இதன் மூலம் கடைசி இடத்தில் இருந்த ஐதராபாத் அணி ஒரு வெற்றியுடன் இரண்டு புள்ளிகளை பெற்று எட்டாமிடத்துக்கு தாவியது.

அடுத்ததாக பெங்களூரு, மும்பை ஆட்டம்.

ரோகித் ஷர்மா டாஸை இழந்தார். புதிதாக ஒரு காம்போவை யோசித்து வெறும் 2 அயல்நாட்டு வீரர்களுடன் களமிறங்கியது மும்பை.

ஓபனிங் கொஞ்சம் செட் ஆகி, கியரை மாற்ற முயற்சிக்கையில் பெங்களூரு பௌலர்களின் கிடுக்கிப்பிடியால் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி பின்னர் அடுத்த 30 ரன்களைச் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்தது.

சூரியகுமார் யாதவ் மட்டும் தனி ஒருவனாக வாள்வீசியதால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் எடுத்தது. 37 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார் சூரியகுமார்.

பெங்களூரு சேஸிங்கை தொடங்கியது. வில்லியம்சன் போலவே இங்கே கேப்டன் டு பிளசிசும் ரன்களை எடுக்க சிரமப்பட்டார். ஆனால் இளம் வீரர் அனுஜ் ராவத் அசால்ட்டாய் பௌண்டரிகளை நொறுக்கினார். டுபிளசிஸ் விக்கெட் வீழ்ந்த பின்னர் கோலி - அனுஜ் இணை நேர்த்தியாக விளையாடியது.

இறுதியில் அடுத்தடுத்து இரு பௌண்டரிகள் விளாச 9 பந்துகள் மீதம் வைத்து வென்றது பெங்களூரு அணி.

பெங்களூரு அணி மூன்று வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறியது. மும்பை தோற்றபோதும் சென்னையை விட மோசமான ரன்ரேட் இல்லாததால் ஒன்பதாமிடத்தில் இருக்கிறது.

நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோற்ற இவ்விரு சென்னை, மும்பை அணிகள் முறையே பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுடன் தங்களது அடுத்த போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இப்போதைய சூழலில் ஐபிஎல்லில் கோப்பையை வெல்லப்போவது யார் எனும் எதிர்பார்ப்பை விட, சென்னை மும்பை இந்த இரு அணிகளில் யார் முதலில் இரண்டு புள்ளிகளை பெறப்போகிறார்கள் எனும் கேள்வி தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

CSK
IPL : Bowlers Who Have Taken the Most Wickets in History

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com