IPL 2022 : CSK -வின் புதிய கேப்டன் ஜடேஜா சாதித்துக்காட்ட முடியுமா?

தோனி எனும் ஆலமரத்தின் கீழ் இது நாள் வரை அதிரடி ஆட்டம் காட்டிவந்த இடது பேட்டரின் ஐபில் கேரியரை திருப்பிப் பார்பதன் மூலம் அவர் மீதான கேள்விகளுக்கு விடைகாண முயல்வோம்.
ஜட்டு, தோனி
ஜட்டு, தோனிTwitter
Published on

12 ஐபில் சீசன்களில் 4 கோப்பைகளை வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அணிக்கு இரண்டாவது கேப்டனாக பதவியேற்கிறார் ஜடேஜா. தோனி கேப்டனாக இருந்தவரை அவரின் முக்கிய தளபதிகளில் ஒருவர் தோனிக்கு அடுத்த கேப்டனாக வருவதில் எந்த பிழையும் இல்லை. துல்லியமாக கேட்ச் பிடிப்பது, டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆக்குவது என சிறந்த பீல்டராகவும், பக்காவான ஃபினிஷராகவும், விக்கெட் டேக்கிங் ஸ்பின்னராகவும் தன்னை பலமுறை நிரூபித்துவிட்ட ஜடேஜா இப்போ எல்லாவற்றையும் விட கடினமான சவாலை எதிர்கொள்கிறார்.

Jadeja
JadejaTwitter

தனக்காக விளையாடாமல் டீம் ப்ளேயராக நிலைத்திருக்கும் பக்குவம், கிட்டத்தட்ட 13 ஆண்டுக்கால சர்வதேச கிரிக்கெட் அனுபவம், வேற லெவல் ஃபார்ம் எல்லாம் அவர் சிறந்த கேப்டனாக இந்த ஆண்டு திகழ்வதற்கு உதவலாம். ஆனால் தோனியின் இடத்தை நிரப்ப இவற்றால் முடியுமா? கேப்டன் கூல் ஆடும் உளவியல் கிரிக்கெட் நிச்சயம் யாருக்கும் வாய்க்காது. தோனியின் ஆளுமையை ஜடேஜாவால் ஈடு செய்ய முடியுமா என்பது அவர் முன்னிருக்கும் மிகப் பெரிய கேள்விக்குறி.

தோனி எனும் ஆலமரத்தின் கீழ் இது நாள் வரை அதிரடி ஆட்டம் காட்டிவந்த இடது பேட்டரின் ஐபில் கேரியரை திருப்பிப் பார்பதன் மூலம் மேலிருக்கும் கேள்விகளுக்கு விடைகாண முயல்வோம்.

முதல் ஐபிஎல்-ல் ராஜஸ்தானுக்காக விளையாடிய ஜடேஜாவுக்கு 2010-ல் வேறு அணிக்கு மாற முயன்றதாக ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 2012 முதல் சென்னை அணிக்காக விளையாடிவரும் ஜடேஜா முதல் சீசனில் இருந்து தன் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாததாக உருகினார். தோனியின் ஆஸ்தான தளபதிகளில் ஒருவரானார். எனினும் 2018ம் ஆன்டு அவரது மோசமான விளையாட்டு ஐபிஎல் கேரியரையே கேள்விக்குறியாக்கியது. அடுத்துக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ரசிகர்களிடயே மிளிரத்தொடங்கினார். 2021 சீசனில் ஜடேஜாவின் பந்து வீச்சு சரமாறியாக அடிவாங்கியது ஆனால் அவரது பேட்டிங் துணை நின்று பெயர் வாங்கித் தந்தது.

ஜடேஜா
ஜடேஜாTwitter

சர்வதேச கிரிக்கெட்டில் தசாப்த காலத்துக்கு மேல் சிறந்த வீரராக இருக்கும் ஜடேஜா எந்த அணியிலும் கேப்டனாக செயல்பட்டதில்லை. முதன்முறையாக கேப்டனாகும் அவருடன் தோனியும் இருப்பதாக சிஎஸ்கே-வின் ஆட்டம் நன்றாக இருக்கும் என நம்பலாம். கடந்த சீசன் வரை 7 கோடி ருபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு வந்த ஜடேஜா இந்த ஆண்டு 16 கோடிக்கு மாறியிருப்பதன் மூலம் அவர் மதிப்பினை அறியலாம். எல்லா ஐபிஎல்-லிலும் சில ஆட்டங்களில் ஆக்ரோஷமாக விளையாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடும் ஜடேஜா தனது கன்சிஸ்டன்சியை மெயின்டன் செய்ய வேண்டியது இன்று முதல் அத்தியாவசியமாகிறது.

ஒரு கேப்டன் மற்ற வீரர்களைப் போலில்லாமல் பொறுப்புகளையும் சுமந்து கொண்டு மைதானத்தில் நிற்க வேண்டும். அதனை கையாளும் கலை எல்லாருக்கு வாய்க்காது. ஒரு வேளை ஜடேஜாவுக்கு கைகூடலாம். ஆல்ரவுண்டரான அவர் போட்டியை கையில் எடுத்துக்கொண்டு பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் அணியைக் காப்பாற்ற முடியும். அது மாதிரி சாகசங்கள் ஜடேஜாவுக்குப் பழக்கப்பட்டது தான். ஆனால் எல்லாவற்றையும் கடந்து ஒரு கேப்டனாக தன்னை எவ்வளவு உறுதியுடன் ஜடேஜா நிலை நிறுத்துவார் என்பதை இன்னும் சில மணி நேரத்தில் சென்னை vs கொல்கத்தா மேட்ச் ஆரம்பித்ததும் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com