BCCI: இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஒரே மாதிரியாக ஊதியம் வழங்கப்படும்!

தற்போது ஆடவர் அணியில் ஒரு வீரருக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஊதியம் 15 லட்சம், ஒரு நாள் போட்டியில் விளையாட ஊதியம் 6 லட்சமாகவும், டி20 போட்டிக்கான ஊதியம் 3 லட்சமாகவும் இருக்கிறது.
indian cricket team
indian cricket teamtwitter
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், வீராங்கனைகள் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு கிரிக்கெட். ஆண்கள், பெண்கள் என இரு பாலினரும் விளையாடுகிறார்கள். ஆண்கள் அணிக்கு நிகரான ரசிகர்கள் கூட்டம் பெண்கள் அணிக்கும் இருக்கிறது. தற்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிகளை நிர்வகிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தற்போது அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளது. அதில் ஆண்கள் அணி வீரர்களுக்கு கொடுக்கப்படும் அதே அளவு ஊதியம் இனி பெண்களுக்கும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆடவர் அணியில் ஒரு வீரருக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஊதியம் 15 லட்சம், ஒரு நாள் போட்டியில் விளையாட ஊதியம் 6 லட்சமாகவும், டி20 போட்டிக்கான ஊதியம் 3 லட்சமாகவும் இருக்கிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரகளுக்கும் வீராங்கனைகளுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தன் டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை பகிர்ந்திருந்தார். "இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகள், வீரர்களுக்கு வழங்கப்படுவது போலவே ஊதியம் பெறுவார்கள். டெஸ்ட் (15லட்சம்), ஒரு நாள் கிரிக்கெட் (6லட்சம்), டி20 (3 லட்சம்). நம் வீராங்கனைகளுக்கு சமமான ஊதியம் என்பது எனது கோரிக்கையாக இருந்தது. அதை நிறைவேற்ற தலைமை ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்

indian cricket team
IndvsPak: கோலியின் ஆட்டத்தால் 1 மணி நேரம் சரிந்த UPI பரிவர்த்தனை! நிபுணர் பகிர்வு வைரல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com