IPL 2022: 'மாரியாத்தா உனக்கு இரக்கமே இல்லையா' விராட் கோலிக்கு தொடரும் துரதிருஷ்டம்

பெங்களூருசேஸிங்கின்போது நன்றாக விளையாட ஆரம்பித்த விராட் கோலி நான்காவது ஓவரில் ரபடாவிடம் அவுட் ஆனார். அப்போது வானத்தை பார்த்து 'எங்கே எனக்கு அதிர்ஷ்டமே கிடையாதா' என்பது போல பார்த்தார். அந்த ஃபோட்டோ நேற்று மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆனது.
PBKS
PBKSTwitter
Published on

பஞ்சாப் அணியிடம் நேற்றைய தினம் பெங்களூரு அணி சரமாரியாக அடி வாங்கியது. இதனால் எளிதாகப் பெற வேண்டிய பிளே ஆஃப் வாய்ப்பு கை நழுவிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு அணி நேற்றைய தினம் பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வென்றால் கிட்டதட்ட பிளே ஆஃப் உறுதியாகி விரும் என்பதால் பெங்களூரு பஞ்சாபை நசுக்க தயாரானது. பஞ்சாப் அணிக்கோ இது வாழ்வா சாவா போட்டி என்பதால் தனது முழு திறனையும் பயன்படுத்த ரெடியானது.

டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் ஃபாப் டு பிளசிஸ் ஃபீலடிங்கை தேர்ந்தெடுத்தார். பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் மற்றும் பேர்ஸ்டோ என இரு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.

மேக்ஸ்வெல் முதல் ஓவர் வீசினார். அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் வைத்து டிரைலர் காட்டினார் பேர்ஸ்டோ. அடுத்த ஓவரை ஹேசில்வுட் வீச, அவரது பந்துகளை பிரித்து மேய்ந்தார் பேர்ஸ்டோ.

பேர்ஸ்டோ
பேர்ஸ்டோTwitter

இரண்டாவது ஓவரிலேயே இரண்டு பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என இருபத்தி இரண்டு ரன்கள் எது பெங்களூரு பௌலர்களை அலறவிட்டார் பேர்ஸ்டோ.

பவர்பிளேவின் கடைசி ஓவரை சிராஜ் வீசினார். அவரது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி என 23 ரன்கள் எடுத்தார் பேர்ஸ்டோ.

பேர்ஸ்டோ ஆடிய ருத்ர தாண்டவத்தால் பவர்பிளே முடிவில் தவான் விக்கெட்டை இழந்தபோதும் 83 ரன்கள் எடுத்து மலைக்க வைத்தது பஞ்சாப் அணி. பேர்ஸ்டோ 21 பந்துகளில் அரை சதமடித்து கலக்கினார்.

இந்த ஐபிஎல் சீசனில் பவர்பிளேவில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுதான். இரண்டே ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்த சிராஜை அதன் பின்னர் ஆட்டம் முடியும் வரை ஃபாப் டு பிளசிஸ் கூப்பிடவே இல்லை.

ஆறாவது ஓவரில் மட்டும் 23 ரன்கள் எடுத்த பஞ்சாப் அடுத்த நான்கு ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதில் பேர்ஸ்டோவும் ஒருவர். இதனால் ரன்ரேட் வேகம் தடாலடியாக சரிந்தது.

RCB
RCBTwitter

லயம் லிவிங்ஸ்டன் 19வது ஓவரை எதிர்கொண்டார். அந்த ஓவரை ஹேசில்வுட் வீசினார். இரண்டு சிக்ஸர்கள் இரு பௌண்டரிகள் என 24 ரன்கள் விளாசினார் லிவிங்ஸ்டன்.

ஐபிஎல் கேரியரியிலேயே தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் ஹேசில்வுட். நான்கு ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்தார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. கடைசி ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் நான்கு ரன்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

PBKS
IPL 2022 : சென்னை வெளியே ஜாவ்- பிளே ஆஃப் ரேஸில் CSK-ஐ துரத்திவிட்ட பெங்களூரு

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். 42 பந்துகளில் ஐந்து பௌண்டரி, நான்கு சிக்ஸர்கள் என விரட்டியடித்து 70 ரன்கள் குவித்தார் லிவிங்ஸ்டன்.

பெங்களூருசேஸிங்கின்போது நன்றாக விளையாட ஆரம்பித்த விராட் கோலி நான்காவது ஓவரில் ரபடாவிடம் அவுட் ஆனார். அப்போது வானத்தை பார்த்து 'எங்கே எனக்கு அதிர்ஷ்டமே கிடையாதா' என்பது போல பார்த்தார். அந்த ஃபோட்டோ நேற்று மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆனது.

PBKS
Virat Kohli: “இதுதான் சுதந்திரம்” : விராட் வரைந்த ஓவியம் - நெகிழ்ந்த ரசிகர்கள்

பெங்களூரு அணியின் ஆட்டத்தை பற்றி விவரிக்க ஏதுமில்லை. மந்தமாக விளையாடிய பெங்களூரு வீரர்கள் 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது பஞ்சாப். தற்போது பஞ்சாப் பாயின்டஸ் டேபிளில் ஆறாமிடத்தில் உள்ளது. பேர்ஸ்டோவுக்கு நேற்று ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

PBKS
Cricket : இங்கிலாந்து டெஸ்ட் அணி பயிற்சியாளராக மெக்கல்லம் நியமனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com