IPL 2022: எதுக்கு உருட்டிக்கிட்டு... ஹைதராபாத்தை நொறுக்கிய பஞ்சாப் - ஆனால் என்ன பயன்?

பஞ்சாப் அணி நேற்று அசத்தல் ஆட்டம் ஆடியது. யாரா இருந்தாலும் அடி, எவனா இருந்தாலும் உதை எனும் பாணியில் பேட்ஸ்மேன்கள் ஆட ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் கிங்ஸ்.
PBKS
PBKSTwitter
Published on

ஐபிஎல் 2022 லீக் சுற்றின் இறுதி ஆட்டம் நேற்றைய தினம் நடந்தது. பிளே ஆஃபுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் ஆறு அணிகள் வேளியேறின. இந்த சூழலில் நேற்றைய தினம் நடந்த ஆட்டத்தில் ஹைதரபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் யார் ஜெயிச்சாலும் தோற்றாலும் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதால் ரசிகர்கள் ஆர்வமின்றி இருந்தனர். ஆனால் பஞ்சாப் அணி நேற்று அசத்தல் ஆட்டம் ஆடியது. யாரா இருந்தாலும் அடி, எவனா இருந்தாலும் உதை எனும் பாணியில் பேட்ஸ்மேன்கள் ஆட ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் கிங்ஸ்.

டாஸ் வென்ற ஹைதரபாத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த இரு போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய நடராஜன் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

பிரியம் கார்க் விக்கெட்டை இழந்தாலும் பவர்பிளே முடிவில் 43 ரன்கள் எடுத்திருந்தது ஹைதரபாத், ராகுல் திரிபாதி பெரிய ஸ்கோர் குவிக்கும் முன் அவுட் ஆனார். எனினும் அபிஷேக் ஷர்மா அதிரடியால் 10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.

ஹர்ப்ரீத் வீசிய 11வது ஓவரில் அபிஷேக் ஷர்மா அவுட் ஆக, அதன் பின்னர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அதே சமயம் ரன்ரேட்டும் மந்தமானது. 16 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெறும் 99 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஆனால் அடுத்த மூன்று ஓவர்களில் ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர் ஜோடி 48 ரன்கள் அடித்து மிரள வைத்தது. கடைசி ஓவரை வீசிய நாதன் எல்லிஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி 10 ரன்கள் மட்டும் கொடுத்தார். ஹைதரபாத் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.

PBKS
IPL 2022: சென்னையை சாத்திய அஷ்வின்; கடைசி போட்டியிலும் கிட்னியை மட்டும் வென்ற CSK

ஆனால், இதெல்லாம் ஒரு டார்கெட்டா பாஸ் எனும் ரேஞ்சுக்கு பொளந்து தள்ளியது பஞ்சாப் கிங்ஸ். பவர்பிளேவிலேயே 62 ரன்கள் எடுத்தது.

10 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி 19 ரன்கள் குவித்த ஷாருக் கான் அவுட் ஆனார்.

கேப்டன் மயங்க் ஒரு ரன்னில் வீழ்ந்தாலும் லயம் லிவிங்ஸ்டன் தனது டிரேட் மார்க் சிக்ஸர்களால் ஹைதரபாத் பௌலர்களை டீல் செய்தார்.

குறிப்பாக ரோமாரியோ ஷெப்பர்ட் வீசிய 15வது ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி என 23 ரன்கள் எடுத்தார்.

ஆட்டம் முடிய 29 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் மேட்சை முடித்து பஞ்சாப். நேற்று அந்த அணி ஆடிய வேகத்தைப் பார்த்தால் 200 ரன்களுக்கு மேல் இலக்கு இருந்தாலும் சேஸிங் செய்திருக்கக்கூடும்.

ஆனால், என்ன செய்வது? காலம் கடந்து விட்டது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் தனது ஏழாவது வெற்றியைப் பதிவு செய்து 14 புள்ளிகளைப் பெற்றது பஞ்சாப். ஆனால் டில்லியை விட ரன்ரேட் குறைவு என்பதால் பாயின்டஸ் டேபிளில் ஆறாமிடத்தை பிடித்தது.

PBKS
உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா- நாக் அவுட்டுக்கு வாய்ப்பு

ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி அதைத் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வி என ரோலர் கோஸ்டர் ஆட்டம் ஆடிய ஹைதரபாத் அணி நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் தனது எட்டாவது தோல்வியைப் பதிவு செய்து பாயின்டஸ் டேபிளில் எட்டாமிடத்தை பிடித்தது.

முக்கியமான பிளே ஆஃப் சுற்று வந்த வாரம் காத்திருக்கிறது. யார் சாம்பியன் என்பது வரும் ஞாயிறு இரவு தெரியும்.

PBKS
அடிச்சது அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்: டெல்லியை வதம் செய்த மும்பை - RCB உள்ளே

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com