Sanju Samson: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சதத்தின் மூலம் சஞ்சு படைத்த சாதனைகள் என்ன?
Sanju Samson: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சதத்தின் மூலம் சஞ்சு படைத்த சாதனைகள் என்ன?Twitter

Sanju Samson: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சதத்தின் மூலம் சஞ்சு படைத்த சாதனைகள் என்ன?

இரண்டாவது போட்டியில் 5ஆம் நிலை வீரராக களமிறங்கிய சஞ்சுவை, கேப்டன் கேஎல் ராகுல் 3வது போட்டியில் டாப் ஆர்டரில் களமிறக்கினார். டாப் ஆர்டரில் ஆடிய முதல் போட்டியிலேயே சதமடித்துள்ளார் சஞ்சு சாம்சன்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தன்னை நிரூபித்துள்ளார் சஞ்சு சாம்சன். இது இந்திய தேர்வுகுழுவை அசர வைத்ததுடன் அணியில் அவரை சேர்பதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என கௌதம் கம்பீர் பாராட்டியிருக்கிறார்.

அப்படியான அசத்தல் இன்னிங்ஸை விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா மண்ணில் வைத்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், விராட் கோலி, சச்சின், கங்குலி முதலிய 7 வீரர்களுக்கு பிறகு 8வது இந்திய வீரராக இணைந்துள்ளார் சஞ்சு சாம்சன். இந்தப்பட்டியலில் விராட் கோலியை (3 சதங்கள்) தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தலா ஒரு சதத்தை மட்டுமே அடித்திருக்கின்றனர்.

Sanju Samson: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சதத்தின் மூலம் சஞ்சு படைத்த சாதனைகள் என்ன?
Sanju Samson : தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் விளாசிய வீரர் பேசியது என்ன?

அந்தப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (22 இன்னிங்ஸ்கள்), சவுரவ் கங்குலி (9 இன்னிங்ஸ்கள்), ரோகித் சர்மா (13 இன்னிங்ஸ்கள்), ஷிகர் தவன் (11), விவிஎஸ் லக்சுமன் (5 இன்னிங்ஸ்கள்) என அனைத்து ஜாம்பவான் இந்திய வீரர்களும் அதிகப்படியான இன்னிங்ஸ்களில் மட்டுமே தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒரு சதத்தை அடித்துள்ளனர். இந்த தொடரில் விளையாடிய சஞ்சு சாம்சன் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி ஒரு சதத்தை அடித்து அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா மண்ணில் 3ஆம் நிலை வீரராக களமிறங்கி சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியுடன் இணைந்துள்ளார் சஞ்சு சாம்சன். இரண்டாவது போட்டியில் 5ஆம் நிலை வீரராக களமிறங்கிய சஞ்சுவை, கேப்டன் கேஎல் ராகுல் 3வது போட்டியில் டாப் ஆர்டரில் களமிறக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் சதமடிக்கும் முதல் கேரள வீரர் என்ற புகழையும் பெறுகிறார் சஞ்சு சாம்சன்.

Sanju Samson: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சதத்தின் மூலம் சஞ்சு படைத்த சாதனைகள் என்ன?
IPL 2023: விராட் கோலி டூ சஞ்சு சாம்சன் - ஐபிஎல்லில் இந்தியர்களின் அதிகபட்ச தனிபட்ட ஸ்கோர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com