FIFA WC 2022: விடுமுறை அறிவித்த சவுதி அரசர்; அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி வரலாற்று சாதனை!

பிறகு 27வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் மற்றொரு வீரர் மார்டினிஸ் கோல் அடித்தார். அது ஆஃப் சைடு என்று அறிவிக்கப்பட்டது போட்டியில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி வரலாற்று சாதனை!
அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி வரலாற்று சாதனை!ட்விட்டர்
Published on

அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் 2 -1 என்ற கணக்கில் சவுதி அரேபிய அணி வெற்றிபெற்றதால், இன்று ஒரு நாள் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று அரசர் உத்தரவிட்டிருந்தார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று, தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா 51வது இடத்தில் இருக்கும் சவுதி அரேபியாவை எதிர்கொண்டது. தோஹாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்தார்.

பிறகு 27வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் மற்றொரு வீரர் மார்டினிஸ் கோல் அடித்தார். அது ஆஃப் சைடு என்று அறிவிக்கப்பட்டது போட்டியில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் அர்ஜென்டினா ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தது.

போட்டியின் 48வது நிமிடத்தில் ஒரு கோல், 53வது நிமிடத்தில் ஒரு கோல் சவுதி அரேபியா சார்பில் அடிக்கப்பட்டது. சவுதி அரேபியாவின் கோல் கீப்பரான அலோவைஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அர்ஜென்டினா வீரர்கள் எவ்வளவோ முயன்றும், கோல் போஸ்ட் அருகில் அரணாக நின்று எதிரணியின் கோல்களை லாவகமாக தடுத்து நிறுத்தியதில், சவுதி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அர்ஜென்டினாவுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்ததை கொண்டாடும் விதமாக இன்று ஒரு நாள் சவுதியில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி வரலாற்று சாதனை!
FIFA உலக கோப்பை 2022 : பெருமைக்கு எருமை மேய்ப்பதா? கத்தார் சந்திக்கும் சர்ச்சைகள் என்ன?

விடுமுறை அனுசரிக்கப்படும் நிலையில், இன்று நடைபெறவிருக்கும் தேர்வுகளின் தேதிகளும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவரும், ராயல் கோர்ட்டின் ஆலோசகருமான டர்கி அல்-ஷேக், தன் டிவிட்டர் பக்கத்தில் செவ்வாயன்று நகரத்தில் உள்ள முக்கிய தீம் பார்க் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் நுழைவுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

கால்பந்து ஜாம்பவான் லியோனெல் மெஸ்சி விளையாடும் அணி அர்ஜென்டினா. இவர் இருக்கும் அணி தோல்வியை தழுவாது என்ற நம்பிக்கையிலிருந்த கால்பந்து ரசிகர்களுக்கு நேற்றைய போட்டி பேரதிர்ச்சியாகவே வந்தமைந்தது.

அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி வரலாற்று சாதனை!
FIFA உலக கோப்பை 2022 : பெருமைக்கு எருமை மேய்ப்பதா? கத்தார் சந்திக்கும் சர்ச்சைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com