Ind vs SA: "என்னையும் சேர்த்துக்கோங்க!" மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு | Video

இந்திய அணிக்கு, துவக்க வீரர்கள் அதிரடியான ஆரம்பத்தை கொடுத்திருந்தனர்.
மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு
மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் பரபரப்புட்விட்டர்
Published on

நேற்று நடைபெற்ற இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது மைதானத்தில் திடீரென பாம்பு ஒன்று புகுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுகிறது இந்தியா தென் ஆப்ரிக்க அணிகள். முதல் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதனை வென்று இந்திய அணி தொடரில் முன்னிலை வகித்தது.

நேற்று ஞாயிற்று கிழமை அன்று இரண்டாவது 20 ஓவர் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்திருந்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் அதிரடியான ஆரம்பத்தை கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஏழாவது ஓவரின் போது திடீரென ஆட்டத்தில் சற்று தடை ஏற்பட்டது. என்னவென்று பார்த்தபோது, மைதானத்தில் ஒரு பாம்பு இருந்தது தெரியவந்தது.

மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு
கர்நாடகா: பாம்பை முத்தமிட முயன்று கொத்து வாங்கிய நபர்- வீடியோ

இதனால் விளையாடுவதை வீரர்கள் நிறுத்த, பாம்பை பிடித்து அப்புறப்படுத்த மைதானத்தில் இருந்த ஊழியர்கள் விரைந்தனர். பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததை ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த தென் ஆப்ரிக்க வீரர்கள் தான் முதலில் கவனித்தனர். இந்திய அணி வீரர் கே எல் ராகுலிடமும், மைதானத்திலிருந்த நடுவர்களிடமும் அவர்கள் விஷயத்தை தெரிவித்தனர்.

பாம்பினை அப்புறப்படுத்தும் இடைவெளியில் இரு அணி வீரர்களும் எப்போதும் 10வது ஓவர் முடிவில் எடுக்கும் டிரின்க்ஸ் பிரேக்கை அந்த நேரத்தில் எடுத்துக்கொண்டனர்.

இதுவரை மழை, அல்லது லைட்டிங் போன்ற பிரச்னைகளால் தான் விளையாட்டு தடைபெற்றிருக்கிறது. மைதானத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்து ஆட்டத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டாவது டி20 போட்டியை இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைபற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு
Ind Vs SA: மின்னல் வேகத்தில் பாய்ந்த இந்திய பவுலர்கள்- சுருண்ட தென் ஆப்ரிக்கா!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com