T20WC: 1992, 2022 போட்டிகளுக்கிடையில் இருக்கும் ஒற்றுமைகள்- மீண்டும் வெல்லுமா பாகிஸ்தான்?

மேலும் 30 வருடங்கள் கழித்து வரலாறு மீண்டும் எடுத்து வைக்கிறது என்ற தியரியும் இருக்கிறது. அப்படி, 1992ல் நடந்த அதே நிகழ்வுகள் இந்த சீசனிலும் நடந்துள்ளன...
Pakistan
PakistanTwitter
Published on

இன்று இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றனர். இதற்கு முன் 1992 உலகக்கோப்பையில் இவ்விரண்டு அணிகள் மோதின. அப்போது பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. தற்போதும் இந்த இரண்டு அணிகள் மோதவுள்ளதால், பாகிஸ்தான் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

மேலும் 30 வருடங்கள் கழித்து வரலாறு ரிபீட் என்ற தியரியும் இருக்கிறது. அப்படி, 1992ல் நடந்த அதே சில நிகழ்வுகள் இந்த பருவத்திலும் நடந்துள்ளன...

1. ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட போட்டிகள்:

1992 ஆம் வருடம் உலகக் கோப்பை நடத்திய நாடு ஆஸ்திரேலியா. இந்த 8வது டி20 உலகக்கோப்பை போட்டிகளும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது

2.இந்தியாவிடம் தோல்வி:

1992ல் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றில் இந்தியாவிடம் தோற்றது. 2022ல் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்தியா தான் வென்றது.

3. முதல் போட்டியில் தோல்வி:

1992ல் மெல்போர்னில் பாகிஸ்தான் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தது. 2022இலும் பாகிஸ்தான் மெல்போர்னில் நடந்த போட்டியில் தோற்றிருந்தது

4. ஆஸ்திரேலியா வெளியேற்றம்:

1992இலும், 2022இலும், நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியா குரூப் ஸ்டேஜிலேயே போட்டியிலிருந்து வெளியேறியது.

5.ஆரம்ப போட்டிகளில் தோல்வி:

குரூப் ஸ்டேஜில், ஆரம்ப போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது

Pakistan
T20WC: பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர் - பாகிஸ்தான் பிரதமர் பதிலடி!

6.அரையிறுதியில் நியூசிலாந்து பாகிஸ்தான்:

அரையிறுதியில் நியுசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.

7. கடைசி நேரத்தில் அரையிறுதி தேர்வு:

அரையிறுதிக்குள் நுழைய ஒரு நாளே மீதமிருந்த சமயத்தில்1 புள்ளி வித்தியாசத்தில் பாகிஸ்தான் தகுதிபெற்றது

8.இறுதியில் இங்கிலாந்துடன் பாகிஸ்தான்:

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதியது. 1992ல் பாகிஸ்தான் வென்றது. இப்போது என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Pakistan
"இந்தியாவை வென்றால் இதை செய்கிறேன்" - பாகிஸ்தான் நடிகை செய்த ட்வீட், ஷாக்கான நெட்டிசன்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com