ஞாயிற்றுக் கிழமை இத்தாலியில் நடந்த வெர்கொனி செஸ் போட்டியில் பங்கேற்று கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான தகுதிகளைப் பெற்றதன் மூலம் இந்தியாவின் 73-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பால சுப்பிரமணியம்.
சர்வதேச அளவில் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற வேண்டுமானால் மூன்று முறை கிராண்ட் மாஸ்டர் நார்ம் தகுதியைப் பெற வேண்டும். அத்துடன் 2500 (ELO - திறனாய்வு) புள்ளிகளும் வேண்டும். இத்தாலியில் நடந்த போட்டிகளில் மூலம் இந்த தகுதிகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார் பால சுப்பிரமணியம்.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதுக்காக இந்தியச் சதுரங்க கூட்டமைப்பு பால சுப்பிரமணியம்-க்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தது.
பால சுப்பிரமணியன் 2019-ம் ஆண்டு சர்வதேச அளவில் மாஸ்ட்டர் பட்டம் வென்றார். 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடரில் 11 ஆவது இடத்தையும், கடந்த ஆண்டு பல்கேரியாவில் நடந்த தொடரில் 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். அடுத்தடுத்த சாதனைகளால் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை எட்டியிருக்கிறார் சுப்பிரமணியம்.
இத்தாலியில் நடைபெற்ற வெர்கானி போட்டியில் 9 சுற்றுகளில் ஆறில் வெற்றி, இரண்டில் தோல்வி மற்றும் ஒரு ட்ரா என 6.5 புள்ளிகளைப் பெற்ற சுப்பிரமணியம் 7வது இடத்தை பிடித்தார்.
இந்தியாவின் மற்றொரு கிராண்ட் மாஸ்டரான ஆந்திராவைச் சேர்ந்த லலித் பாபு 7 புள்ளிகள் பெற்று சாம்பியன் வென்றார். தொடர்ந்து
வெற்றிகளைப் பெற்றுவரும் லலித் பாபாவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.