விம்பிள்டனில் ஒலித்த "வாத்தி கம்மிங்" - அர்த்தம் தேடிய வெளிநாட்டவர்கள்

இந்த தொடர் லண்டனில் நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு விருந்தினராக முன்னாள் விம்பிள்டன் சாம்பியனும், டென்னிஸ் உலகின் ஜாம்பவானுமாகிய ரோஜர் பெடரர் வந்துள்ளார். அவர் வந்துள்ளதை விம்பிள்டன் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.
Roger Federer
Roger FedererTwitter
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். இப்படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடல், படம் வெளியாவதற்கு முன்பே இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது.

அனிருத் இசையில் உருவாகிய வாத்தி கம்மிங் பாடல் யூ டியூப்பில் மட்டும் இதுவரை 372 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பார்க்கப்பட்டுள்ளது

குறிப்பாகக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பப்பட்ட பாடலாக ‘’வாத்தி கம்மிங்’’ இருந்தது. இந்நிலையில் வெளிநாட்டவர்கள் வாத்தி கம்மிங் குறித்து தேடும் அளவிற்கு பேமஸ் ஆகிவிட்டது.

வாத்தி கம்மிங் ஹேஷ்டேக்கினை பதிவிட்டு விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ரோஜர் பெடரர் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்

டென்னிஸ் உலகின் பிரபலமான தொடர்களில் ஒன்றாக விம்பிள்டன் தொடர் திகழ்கிறது. லண்டன் மாநகரில் உள்ள விம்பிள்டன் இடத்தில் ஆண்டுதோறும் இந்த தொடர் நடைபெறுவது வழக்கம்.

தற்போது, இந்த தொடர் லண்டனில் நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு விருந்தினராக முன்னாள் விம்பிள்டன் சாம்பியனும், டென்னிஸ் உலகின் ஜாம்பவானுமாகிய ரோஜர் பெடரர் வந்துள்ளார்.

அவர் வந்துள்ளதை விம்பிள்டன் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது. அதில் ரோஜர் பெயரை பகிர்ந்து “வாத்தி கம்மிங்” என்று பதிவிட்டுள்ளது.

இந்த பதிவுக்கு கீழ் தமிழனின் பெருமையைப் புகழ்ந்து தமிழர்கள் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்தியர்தான் விம்பிள்டனின் அட்மின் என்று பதிவிட்டுள்ளனர்.

இதற்கு அர்த்தம் புரியாத வெளிநாட்டவர்கள் பலரும் வாத்தி கம்மிங்கிற்கு இணையத்தில் அர்த்தம் தேடி வருகின்றனர். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Roger Federer
ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com