Virat : "டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுடனான நட்பு இப்படி தான் ஆரம்பித்தது" - மனம் திறந்த கோலி
Virat : "டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுடனான நட்பு இப்படி தான் ஆரம்பித்தது" - மனம் திறந்த கோலிTwitter

Virat : "டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுடனான நட்பு இப்படி தான் ஆரம்பித்தது" - மனம் திறந்த கோலி

நான் எனது 50வது சதம் விளாசியபோது அவர் எனக்காக ஸ்டோரி வைத்திருந்தார்.

டென்னிஸ் வீரர் ஜோகோவிச் உடனான நட்பு பற்றி விராட் கோலி, "ஜோகோவிச் உடன் எனக்கு ஏற்பட்ட பழக்கம் யதார்த்தமானது. ஒரு முறை அவர் Insta கணக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது Hi சொல்லலாம் என மெசேஜ் செய்தேன். ஆனால், அவரிடம் இருந்து ஏற்கனவே எனக்கு மெசேஜ்கள் வந்திருந்தன. நான் அதை கவனிக்கவில்லை. அதனால் போலி கணக்கு என நினைத்தேன். அதன்பின் நாங்கள் மெசேஜில் பேசிக்கொண்டோம். அவரின் சாதனைகளுக்கு நான் வாழ்த்து கூறினேன். நான் எனது 50வது சதம் விளாசியபோது அவர் எனக்காக ஸ்டோரி வைத்திருந்தார். சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்களுடன் பழகுவது அருமையான விஷயம். அவர் இந்தியா வந்தாலோ அல்லது நான் அவர்விளையாடும் நாடுகளுக்கு சென்றாலோ நிச்சயமாக அவரை நேரில் சந்திப்பேன்.

சமீபத்தில் ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடும் வீடியோ பார்த்தேன். அவர் பேட் பிடித்திருக்கும் விதத்தை பார்த்தபோது, நான் அதை சரிசெய்ய வேண்டும்போல் இருந்தது. டென்னிஸ் எவ்வளவு வேகமாக இருக்கும் என எனக்கு தெரியும். நான் டென்னிஸ் விளையாடியதில்லை. அவருடன் விளையாடினால் நன்றாக இருக்கும். அவருக்கு கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிக்க வேண்டும் என்றுதான் நான் சொல்லித்தர முடியும்" எனப் பேசினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com