பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து பத்ம விருதை திருப்பியளிக்கும் விரேந்தர் சிங்!

நேற்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்ம ஶ்ரீ விருதை பிரதமர் மோடியிடமே திருப்பி அளிப்பதாக அறிவித்தார். சாக்‌ஷி மாலிக் முன்னதாக மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து பத்ம விருதை திருப்பியளிக்கும் விரேந்தர் சிங்!
பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து பத்ம விருதை திருப்பியளிக்கும் விரேந்தர் சிங்!Twitter

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பாஜக பிரமுகர் பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் குற்றாச்சட்டுகளை முன்வைத்தனர்.

சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கம் வாங்கி நாடுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் 40 நாட்கள் சாலையில் அமர்ந்து போராடினர்.

இறுதியாக பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சை சிங் வெற்றிபெற்றார்.

இதனால் மனமுடைந்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் நேற்றுக்கு முந்தைய தினம் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

நேற்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்ம ஶ்ரீ விருதை பிரதமர் மோடியிடமே திருப்பி அளிப்பதாக அறிவித்தார். அதன் படி பிரதமர் இல்லத்தின் நடைமேடையில் தனது பத்மஶ்ரீ பதக்கத்தை விட்டுச்சென்றார்.

இவர்களைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மல்யுத்த வீரர் விரேந்திர சிங் தனது பத்மஶ்ரீ விருதை திருப்பி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து பத்ம விருதை திருப்பியளிக்கும் விரேந்தர் சிங்!
"மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்" கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக் பேசியதன் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com