உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்திய அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதுவரை இந்திய அணி மட்டும் தான் ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை.
அடுத்தடுத்த இடங்களில், அணிகளின் பெயர்கள் மாறி வருகிறது. யாரும் எதிர்பாராத விதமாக ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து போன்ற அணிகள் பாகிஸ்தன், இங்கிலாந்து, இலங்கை என அனுபவமிக்க வீரர்கள் உள்ள அணிகளை தோற்கடித்து வருகிறது.
இப்படி அணிகளுக்குள் அரையிறுதிக்கு செல்ல கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்திய அணி வீரர்கள் வேறு ஒரு போட்டியின் மீது முனைப்புடன் இருக்கின்றனர். அது சிறந்த ஃபீல்டருக்கான மெடலை பெறும் போட்டியாகும்.
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் புதியதொரு சடங்கை (tradition) தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு உலகக்கோப்பை போட்டி முடிந்த பின்னரும், அன்றைய நாளில் மிகச் சிறப்பாக ஃபீல்டிங் செய்தவருக்கு தங்க பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த தங்கப்பதக்கத்தை வெல்ல, இந்திய அணி வீரர்கள் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.
முதல் போட்டி நடந்து முடிந்தது முதல், இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில், அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர், டி. திலீப், அன்றைய போட்டியை விமர்சிக்கிறார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களை பாராட்டியதுடன், அவர்களில் முதலிடம் பெற்றவருக்கு தங்கபதக்கம் வழங்குகிறார்.
இப்படி பாராட்டி அங்கீகாரம் வழங்குவதால், கூடுதல் உற்சாகத்துடன் வீரர்கள் களம் இறங்குகின்றனர். அணி வீரர்களுக்குள் ஒரு நேர்மறையான போட்டி உணர்வை இது உருவாக்குகிறது. தங்கள் திறனை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துகின்றனர். இது நேரடியாக அணியின் ஒட்டுமொத்த ஆட்டத்தின் மீது விளைவை ஏற்படுத்துகிறது என்கின்றனர், பிசிசிஐ அதிகாரிகள்.
இந்த பதக்கம் வழங்கும் வழக்கத்தை நடந்து முடிந்த இந்தியா ஆஸ்திரேலியா இரு தரப்பு தொடருக்கு பின்னர் தொடங்கியதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்தது.
அணி வீரர்கள் பறந்து பறந்து ஃபீல்டிங் செய்து வருகின்றனர். களத்தில் ஒரு கேட்ச் பிடித்தாலோ, ஃபோர் அல்லது சிக்சரை தடுத்தாலோ, அவர்கள், எனக்கு இன்று பதக்கம் கிடைக்கும் என்பது போல கேமராவை பார்த்து சைகை செய்கின்றனர்.
இந்த பதக்கத்தை ஒரு ஒரு முறையும் அணி நிர்வாகம், வித்தியாசமாக அறிவிக்கிறது.
முதலில் டிரெச்சிங் ரூமில் சாதாரணமாக பயிற்சியாளர் வழங்கினார். அதன் பின்னர், மைதானத்தின் டிவியில் வெற்றியாளர் யார் என்று திரையிட்டனர். சமீபத்தில் நடந்து முடிந்த போட்டிக்கு பின்னர், மைதானத்தில் இருக்கும் ஸ்பைடி கேமரா பதக்கதை ஏந்தி வந்தது.
இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
இதுவரை பதக்கம் வென்ற வீரர்கள்
விராட் கோலி
ஷர்துல் தாகூர்
கே எல் ராகுல்
ரவிந்த்ர ஜடேஜா
ஷ்ரேயஸ் ஐயர்
அடுத்த முறை பதக்கம் யாருக்கு, எப்படி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்திய அணி வருகின்ற அக்டோபர் 29ஆம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust