WWC22: சதம் விளாசிய ஸ்மிருதி, ஹர்மன்; மாபெரும் வெற்றி; மாஸ் காட்டிய மகளிர் இந்தியா!

அதன் பிறகு 13வது ஓவரில் தீப்தி ஷர்மா விக்கெட்டை பறிகொடுத்தது இந்திய அணிக்குப் பேரிடியாகக் கருதப்பட்டது. ஆனால் இனி தான் அனல் பறக்கப் போகிறது என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
Smiriti

Smiriti

Twitter

Published on

பெண்களுக்கான உலகக்கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் இருவரும் சதமடித்து அசத்தியிருக்கின்றனர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் பேட்டிங் தேர்வு செய்தார். ஸ்மிருதி மந்தனா மற்றும் யாஸ்திகா பாட்டியா களமிறங்கினர். 6வது ஓவரில் யாஸ்திகா பாட்டியா விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் மித்தாலி ராஜ் 9வது ஓவரில் விக்கெட்டை இழக்க முதல் பவர் ப்ளே முடிவதற்குள் இந்திய அணி இரண்டு பேட்ஸ் மேன்களை இழந்தது வீரர்களை பிரஷர் செய்யத்தொடங்கியது. அப்போது அணியின் ச்கோர் 62 மட்டுமே.

அதன் பிறகு 13வது ஓவரில் தீப்தி ஷர்மா விக்கெட்டை பறிகொடுத்தது இந்திய அணிக்குப் பேரிடியாகக் கருதப்பட்டது. ஆனால் இனி தான் அனல் பறக்கப் போகிறது என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.


ஸ்மிருதி மந்தனா உடன் கைக் கோர்த்தார் ஹர்மன்பிரீத் கவுர். இருவரும் நிதானமாக ஆடி 20வது ஓவரில் அணிக்கு 100 ரன்கள் சேர்த்தனர். அதன் பிறகு மைதானம் சுருங்கி கைக்குள் வந்தது. ஸ்மிருதி மந்தனா 40வது ஓவரில் மேத்யூஸின் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார். 41 வது ஓவரில் அதிரடியாக மூன்று பவுண்டரிகளை பறக்கவிட்டார். 43 வது ஓவரில் 119 பந்துகளுக்கு 123 ரன்கள் அடித்த நிலையில் பெவிலியன் திரும்பினார் மந்தனா. எனினும் ஆட்டத்தில் அதிரடிக்குப் பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டார் ஹர்மன் ப்ரீட்.

47வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான்காவது ஒருநாள் சதத்தை அடித்தார். உலகக் கோப்பையில் ஹர்மன்பிரீத் கவுரின் இரண்டாவது சதம் இதுவாகும். ஹர்மன்பிரீத் 100 பந்துகளில் 100 அடித்திருந்தார் ஹர்மன். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 318 ரன்கள் வெற்றி இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது.

தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடக்க வீரர்களான ஹேலி மேத்யூஸ் மற்றும் டியான்ட்ரா டாட்டின் கூட்டணி 100 ரன்களை எட்டியது. டியான்ட்ரா 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் அரை சதம் அடித்தார். ஆனால் விரைவிலேயே ஸ்நே ராணாவின் பந்து வீச்சில் 62 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கிஸ்ஸியா 5 ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றமளித்தது.அடுத்தடுத்து பெரிய ரன்கள் இல்லாமல் தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் மைதானத்தை காலி செய்ய 40 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென்னாப்பிரிக்க அணி.

இந்திய அணிக்கு இது மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. 123 ரன்கள் அடித்த ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகியாகத் தேர்வாகியுள்ளார். ஆனால், அவர் அணிக்கு இன்னொரு சதத்தை வழங்கிய ஹர்மன்ப்ரீத் கவுருடன் அதைப் பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணி உலகக் கோப்பை பட்டியலில் மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளோடு, அதிகப் புள்ளிகளைப் பெற்று உயர்ந்துள்ளது. ரன் ரேட்டில் ஆஸ்திரேலியாவை மிஞ்சியுள்ளது.

<div class="paragraphs"><p>Smiriti</p></div>
Fitness and Health : பெண்கள் எல்லாரும் கண்டிப்பா சிலம்பம் கத்துக்கனும் - பிரியா | video

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com