தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தர் ராஜன் முன்னிலையில் பாஜக-வை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்ட பெண்ணிற்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய பாஜக தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்தார். அப்போது அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்த விமானத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண்ணும் அதே விமானத்தில் வந்துள்ளார்.
சோபியா தமிழிசை முன்னிலையில் அவரையும் பாஜக கட்சியையும் விமர்சித்திருக்கிறார். இதனால் விமானநிலையத்தில் பாஜக தொண்டர்கள் சோபியாவை அவதூறாக பேசியதுடன் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்பாட்டின் பெயரில் அவர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பெயரில் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு சோபியா மற்றும் பெற்றோர் விசாரணை எனக் கூறி அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மதியம் 1.30க்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களை இரவு 7.30 வரை குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் காவல் நிலையத்தில் காக்க வைத்துள்ளனர்.
சோபியாவின் தந்தை இது குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. விசாரணை அறிக்கை அடைப்படையில் தற்போது மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன், தமிழக அரசு சோபியாவிற்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் வழங்கப்படும் 2 லட்சம் நஷ்ட்ட ஈடு, முதல் குற்றவாளியாக கருதப்படும் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமலை ரூ.50000 மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த பணம் சோபியாவுக்கு ஒரு மாதத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.